ஓ மை காட்!: பாடல் ஆல்பத்தை காப்பியடித்து நிர்வாண போஸ் கொடுத்த ஆமீர் கான்
மும்பை: ஆமீர் கான் நிர்வாண போஸ் கொடுத்தது போர்ச்சுக்கீசிய பாடகரின் ஆல்பத்தை பார்த்து காப்பியடிக்கப்பட்டுள்ளது.
ஆமீர் கான் நடிக்கும் பி.கே. படத்தின் கதை என்ன, அதில் யார் யார் எல்லாம் நடிக்கிறார்கள் என்பது பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. அது எப்படி ஆமீர் நிர்வாணமாக போஸ் கொடுக்கலாம் என்று தான் அனைவரும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
தெரியாத் தனமாக போஸ்டருக்கு ஆடையின்றி போஸ் கொடுத்துவிட்டு திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறார் ஆமீர்.

போஸ்டர்
பி.கே. போஸ்டரில் ஆமீர் ஆடையின்றி கையில் ஒரு டேப் ரிக்கார்டரை வைத்து மானத்தை மறைத்துக் கொண்டிருப்பார். இது படக்குழுவினரின் சொந்த ஐடியா அல்ல.

காப்பி
1973ம் ஆண்டு வெளியான போர்ச்சுக்கீசிய பாடகர் க்விம் பாரைரோஸின் ஆல்பத்தின் அட்டைப்படத்தில் அவர் இசைக்கருவியை வைத்துக் கொண்டு நிர்வாணமாக போஸ் கொடுத்திருப்பார். அதை தான் பி.கே. படக்குழு காப்பியடித்துள்ளது.

தூம் 3
ஆமீர் கான் வில்லனாக நடித்த தூம் 3 படத்தின் போஸ்டர் 'தி டார்க் நைட்' ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது.

தலாஷும்
ஆமீர் கான், கரீனா கபூர், ராணி முகர்ஜி நடிப்பில் வெளியான தலாஷ் படத்தின் போஸ்டர் 'தி மிஷன் இம்பாசிபிள்- கோஸ்ட் ப்ரோட்டோகால்' படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டது.

இது தேவையா?
பி.கே. பட போஸ்டருக்கு இப்படி ஒரு போஸ் கொடுத்துவிட்டு இது உனக்கு தேவையா என்று ஆமீர் கான் தன்னைத் தானே கேட்டுக் கொண்டாலும் ஆச்சரியம் இல்லை.


Click it and Unblock the Notifications











