twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கத்தி பிரச்சனையால் சர்கார் படத்திற்கு தடை விதிக்கக் கோரி விஷாலிடம் மனு

    By Siva
    |

    Recommended Video

    கத்தி பட கதை என்னுடையது- தாகபூமி குறும்பட இயக்குனர்- வீடியோ

    சென்னை: சர்கார் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

    ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்திற்கு பிரச்சனை மேல் பிரச்சனை ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் குறும்பட இயக்குனர் ராஜசேகர் என்பவர் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷாலிடம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

    அதில் அவர் கூறியிருப்பதாவது

    உதவி இயக்குனர்

    உதவி இயக்குனர்

    இயக்குநர் முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் உதவி இயக்குநர் வாய்ப்பு வேண்டுவோர் தங்களின் விவரங்களை அனுப்பலாம் என்று கடந்த 30.06.2013 அன்று குறிப்பிட்டிருந்தார். அவர் கேட்டுக்கொண்டதன் பேரில் எனது தாகபூமி குறும்பட விவரங்களை அனுப்பி வைத்தேன். அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

    குறும்படங்கள்

    குறும்படங்கள்

    பின்னர் நான் பலே, தாழ்ப்பாள் உள்ளிட்ட குறும்படங்களை இயக்கினேன். அதே நேரத்தில் தாகபூமி குறும்படத்தை படமாக இயக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு வந்தேன். இந்நிலையில் தாகபூமி குறும்படத்தை திருடி எனது அனுமதியில்லாமல் கத்தி திரைப்படமாக இயக்குநர் முருகதாஸ் எடுத்துவிட்டார். அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த நான் படக்குழுவில் உள்ள தயாரிப்பாளர் உள்ளிட்ட அனைவரிடமும் நியாயம் கேட்டேன். பதில் எதுவும் வரவில்லை.

    வழக்கறிஞர்

    வழக்கறிஞர்

    பிறகு எனது வழக்கறிஞர் மூலம் முருகதாஸ், விஜய், லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பாளர்களான சுபாஸ்கரன், கருணாமூர்த்தி ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட 5 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்கப்பட்டிருந்தது. லைக்கா நிறுவனத் தயாரிப்பாளர்களிடமிருந்து எனக்கு பதில் வந்தது. ஆனால் முருகதாஸிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை.

    நீதிமன்றம்

    நீதிமன்றம்

    பின்பு காப்புரிமை சட்டத்தின்படி தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அவ்வழக்கு 4 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதே வழக்கு தஞ்சாவூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு நீதிமன்றத்திற்கும் வீட்டிற்கும் அலைந்து 4 ஆண்டுகளை இழந்திருக்கிறேன். எனது உழைப்பை திருடியது மட்டுமில்லாமல் மனரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் பாதிப்பை ஏற்படுத்தி மிகுந்த மன உளைச்சலுக்கு முருகதாஸ் என்னை ஆளாக்கியுள்ளார். எனவே எனது பக்கம் உள்ள நியாயத்தின் அடிப்படையிலும் எனக்கு நியாயம் கிடைக்கும் வரை சர்கார் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்குமாறு (ரெட் கார்டு) கேட்டுக் கொள்கிறேன் என்று ராஜசேகர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

    English summary
    A short filmmaker has given a complaint to actor Vishal seeking ban on Sarkar.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X