இதய வடிவில் சப்பாத்தி: இதை நாங்க இந்தி பிக் பாஸ் 9-லேயே பார்த்தாச்சு
Recommended Video
சென்னை: பிக் பாஸ் 3 ப்ரொமோ வீடியோவை பார்த்ததும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசன் தான் நினைவுக்கு வருகிறது.
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கவின் சாக்ஷியை விட்டுவிட்டு லாஸ்லியாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார். இது சாக்ஷிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. கவின் பெயரை கெடுக்க என்னென்னவோ செய்து கொண்டிருக்கிறார் சாக்ஷி.
இந்நிலையில் இன்று ஒரு ப்ரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.
சாக்ஷி
ப்ரொமோ வீடியோவில் சாக்ஷி இதய வடிவில் சப்பாத்தி சுட்டுக் கொண்டிருப்பது போன்று காட்டுகிறார்கள். அந்த சப்பாத்தி கண்டிப்பாக கவினுக்காக சுடப்பட்டதாக இருக்கும். இந்த இதய வடிவ சப்பாத்தி சுட்டு காதலை வெளிப்படுத்தும் காட்சி இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காப்பியடிக்கப்பட்டுள்ளது ஆகும்.

யுவிகா சவுத்ரி
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த நடிகரும், மாடலுமான பிரின்ஸ் நருலா சல்மான் கான் நடத்தும் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் 9வது சீசனில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது நடிகை யுவிகா சவுத்ரி மீது காதல் கொண்டார். இதையடுத்து இதய வடிவில் பரோட்டா சுட்டு யுவிகாவுக்கு கொடுத்து காதலை வெளிப்படுத்தினார். அந்த காட்சியை காப்பியடித்து தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது பயன்படுத்தியுள்ளனர்.
காப்பி
இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து காட்சிகளை காப்பியடிப்பது இது ஒன்றும் முதல் முறை அல்ல. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்தே இந்த காப்பி விவகாரம் நடந்து கொண்டிருக்கிறது. முதல் சீசனில் பரணி பிக் பாஸ் வீட்டில் இருந்து தப்பியோட முயன்றது, இரண்டாவது சீசனில் மும்தாஜின் அம்மா வந்தபோது அவர் ஃப்ரீஸ் டாஸ்கில் அப்படியே இருந்தது, கடந்த சீசனில் கமல் ஹாஸன் கோபமாக கோட்டை கழற்றி வீசியது எல்லாமே இந்தி பிக் பாஸில் இருந்து சுட்டது தான்.

பிக் பாஸ்
பிக் பாஸ் 3 ப்ரொமோ வீடியோவை பார்த்தால் இந்த காப்பி அடிக்கிற வேலையை விடவே மாட்டார்கள் என்பது மட்டும் நன்றாக தெரிகிறது. இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இதய வடிவில் பரோட்டா சுட்டுக் கொடுத்த பிரின்ஸ் நருலா யுவிகா சவுத்ரியை தான் திருமணம் செய்தார். தமிழில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











