»   »  அஞ்சலி சொன்ன இந்த விஷயம் தெரிந்தால் ஜெய்க்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும்!

அஞ்சலி சொன்ன இந்த விஷயம் தெரிந்தால் ஜெய்க்கு ஹார்ட் அட்டாக்கே வந்துடும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தன் மனதிற்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவில்லை என்று நடிகை அஞ்சலி தெரிவித்துள்ளார்.

நடிகை அஞ்சலியும், நடிகர் ஜெய்யும் காதலிப்பதாக பலகாலமாக பேசப்படுகிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் லிவ் இன் முறைப்படி ஒரே வீட்டில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜெய் கூட அஞ்சலிக்கு தோசை எல்லாம் சுட்டுக் கொடுத்து அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டார்.

காதல்

காதல்

தனது சினிமா பயணம் நன்றாக சென்று கொண்டிருப்பதால் காதல், கல்யாணம் பற்றி நினைக்க நேரம் இல்லை என்கிறார் அஞ்சலி. மனதிற்கு பிடித்தவரை இன்னும் பார்க்கவே இல்லை என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.

கணவர்

கணவர்

என் மனதிற்கு பிடித்தவரை தேடிக் கொண்டே இருக்கிறேன். அவர் இன்னும் என் கண்ணில் படவில்லை. நாளையே அவர் என் கண்ணில் பட்டுவிட்டால் நிச்சயம் அனைவரிடமும் கூறுவேன் என்கிறார் அஞ்சலி.

ஜெய்

ஜெய்

நானும், அஞ்சலியும் திருமணம் செய்து கொண்டாலும் செய்வோம் என்று ஜெய் சொன்னது எனக்கு தெரியாது. என்னையும், அவரையும் சேர்த்து நிறைய செய்திகள் வந்துவிட்டது, போதும் என்று அஞ்சலி கூறியுள்ளார்.

எதிர்காலம்

எதிர்காலம்

நம் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நாம் நிர்ணயிக்க முடியாது. எது எது எந்தெந்த நேரத்தில் நடக்குமோ அது அது அந்தந்த நேரத்தில் நடக்கும் என்று நம்புகிறேன் என்று அஞ்சலி தெரிவித்துள்ளார்.

அரசியல்

அரசியல்

நான் அரசியலுக்கு வருவதாக சொல்வதில் உண்மை இல்லை. டெல்லி சென்றபோது நாடாளுமன்றத்தை சுற்றிப் பார்த்தேன். உடனே நான் அரசியலுக்கு வருகிறேன் என்று கூறிவிட்டார்கள். எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணமே இல்லை என்கிறார் அஞ்சலி.

English summary
Actress Anjali said that she is yet to find her Mr. Right and will let us know when she meets him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil