ஒருத்தர்கூட ஒருத்தர் போறதுக்கு காதல் மட்டும்தான் காரணம்.. ஏழு கடல் ஏழு மலை படத்தின் க்ளிம்ப்ஸ்

சென்னை: ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் ஏழு கடல் ஏழு மலை. படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்திருக்கிறார். கண்டிப்பாக இந்தப் படம் பெரும் வெற்றி பெறும் என ராமின் ரசிகர்கள் கூறிவருகின்றனர். இந்த சூழலில் படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சி வெளியாகியிருக்கிறது.

பாலுமகேந்திராவிடம் நா.முத்துக்குமார் மூலம் உதவி இயக்குநராக இணைந்தவர் ராம். அவருடன் தொடர்ந்து பயணித்துவிட்டு கற்றது தமிழ் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ஜீவா நடித்திருந்த அந்தப் படம் ரொம்பவே சென்சிட்டிவ்வான சப்ஜெக்ட்டை கொண்டது. முதல் படத்திலேயே அப்படி ஒரு கதைகளை எடுத்துக்கொண்டு அதை தனது மேக்கிங் மற்றும் வசனங்கள் மூலம் மிகச்சிறப்பாக கையாண்டிருப்பார் ராம்.

Yezhu Kadal Yezhu Malai Movie Glimpse was out now

கல்ட் கிளாசிக்: ஆனால் அந்தப் படம் ரிலீஸானபோது பெரிதாக கொண்டாடப்படவில்லை. அதேசமயம் பல வருடங்கள் கழித்து இப்போது அந்தப் படத்தை கொண்டாடி தீர்க்கிறார்கள் ரசிகர்கள்.முக்கியமாக படத்தில் வரும் பாடல்கள், ஜீவா - அஞ்சலி ஆகியோருக்கிடையேயான் காதல் உரையாடல்கள் என கற்றது தமிழ் எந்தக் காலத்துக்கும் பலரால பேசப்பட்டுக்கொண்டே இருக்கும் என்பது மட்டும் உண்மை.

தரமான இயக்குநர்: கற்றது தமிழ் படம் வணிக ரீதியாக தோல்விப்படமாக அமைந்தாலும் அதை பற்றி எதுவும் கவலைக்கொள்ளாமல்; எதற்காகவும், யாருக்காகவும் தன்னுடைய கதையில் காம்ப்ரமைஸ் செய்துகொள்ளாமலும் இருந்தார் ராம். அந்தப் படத்துக்கு பிறகு தங்க மீன்கள் படத்தை இயக்கினார். தந்தைக்கும் - மகளுக்கும் இடையே நடக்கும் பாசம் பற்றித்தான் படத்தில் பேசியிருப்பார். படம் தரமாக இருந்தாலும் வழக்கம்போல வணிக ரீதியாக சரியாக போகவில்லை.

அடுத்தடுத்த படங்கள்: இருந்தாலும் தன்னுடைய பாதையை மாற்றிக்கொள்ளாத அவர் அடுத்ததாக தரமணி படத்தை இயக்கினார். ஃபெமினிசம் பற்றி அந்தப் படத்தில் பேசியிருந்தார். படத்தை பார்த்த வெற்றிமாறன் தமிழ் சினிமா வரலாற்றில் ஃபெமினிசம் பற்றி நன்றாக பேசியிருக்கும் படம் என்றால் அது தரமணிதான் என்று புகழ்ந்திருந்தது கவனிக்கத்தது. கடைசியாக ராம் இயக்கத்தில் பேரன்பு படம் வெளியானது. அந்தப் படத்துக்கும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பே கிடைத்தது.

ஏழு கடல் ஏழு மலை: சூழல் இப்படி இருக்க அவர் தற்போது நிவின் பாலி, அஞ்சலி, சூரி உள்ளிட்டோரை வைத்து ஏழு கடல் ஏழு மலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். சுரேஷ் காமாட்சி படத்தை தயாரித்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். அஞ்சலி நீண்ட நாட்கள் கழித்து ராம் இயக்கத்தில் நடிக்கிறார். கண்டிப்பாக கற்றது தமிழ் படம் மாதிரி இதிலும் அட்டகாசமான நடிப்பை அஞ்சலியிடமிருந்து ராம் வாங்குவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பலமாகவே எழுந்திருக்கிறது.

க்ளிம்ப்ஸ் வீடியோ: இந்நிலையில் ஏழு கடல் ஏழு மலை படத்தின் க்ளிம்ப்ஸ் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று க்ளிம்ப்ஸ் வெளியாகியிருக்கிறது. மொத்தம் இரண்டு நிமிடங்கள் 4 நொடிகள் அந்த க்ளிம்ப்ஸ் ஓடுகிறது. 'ஒருத்தரைவிட்டு ஒருத்தர் போறதுக்கு 1000 காரணம் இருக்கலாம். ஆனால் ஒருத்தரோட ஒருத்தர் போறதுக்கு ஒரே காரணம்தான். அது காதல்' என்ற வசனத்தோடு அந்த க்ளிம்ப்ஸ் தொடங்குகிறது.

தொடர்ந்து ரயிலில் சூரியும், நிவின் பாலியும் உரையாடும்படி நகர்கிறது. அந்த உரையாடலில் ஃபேண்டஸி ஜானரில் நிவின் கதை சொல்வது போல் அமைந்திருக்கிறது. அஞ்சலி தேவதை போல் காட்சியளிக்கிறார். மேலும் எனக்கு வயது 8000 என்று நிவின் பாலி சொல்வதும் அதற்கு சூரியின் ரியாக்‌ஷனும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. முக்கியமாக யுவன் ஷங்கர் ராஜாவின் இசை படத்தின் கதை மீதான எதிர்பார்ப்பை பன்மடங்கு அதிகரிக்க செய்கிறது. க்ளிம்ப்ஸ் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. இதற்கிடையே இந்தப் படமானது ரோட்டர்டாம் சர்வதேச திரைப்பட விழாவில் பிக் ஸ்க்ரீன் பிரிவில் போட்டியிட தேர்வாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X