விளக்கு பிடிச்சாங்களா? சத்யராஜ் மகள் இப்படி பேசலாமா? விளாசிய ஒய்ஜி மகேந்திரன் மகள்!
சென்னை: அண்மையில் திமுகவில் இணைந்த நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், திமுக கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அதில், திமுகவின் வரலாறை எல்லோரும் படிக்க வேண்டும். திமுக வரலாறு படித்தால்தான் நமக்கு வெற்றி என்றால் என்ன, தோல்வி என்றால் என்ன, தியாகம் என்றால் என்று பேசியது மட்டுமில்லாமல், கொரோனா கலத்தில் பிஜேபியின் செயல்பாடுகள் குறித்தும் பேசி இருந்தார். இதற்கு ஒய்ஜி மகேந்திரன் மகள் சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார்.
சென்னையில் நடைபெற்ற திமுக கட்சி கூட்டத்தில் பேசிய திவ்யா சத்யராஜ், ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற அந்த தருணம் மிகவும் சவாலான தருணம், அந்த நேரம் கொரோனா உச்சகட்டத்தில் இருந்தது. நான் உயிரோடு இருப்பனா.. நீங்கள் உயிரோடு இருப்பீர்களா.. என்பது யாருக்குமே தெரியவில்லை. அந்த நேரத்தில் ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராகி கொரோனாவை கட்டுப்படுத்தினார்கள். அந்த நேரத்தில் பாஜக தலைவர் என்ன செய்து கொண்டு இருந்தார் என்றால், வாங்க அனைவரும் ஜாலியாக பால்கனியில் நின்று கொண்டு விளக்கு பிடிக்கலாம் , கைதட்டலாம் என்று பேசி இருந்தார்.

தவறான பேச்சு: திவ்யா சத்யராஜ் அவர்களின் பேச்சு குறித்து பேசிய, ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி, விளக்கு பிடிச்சாங்க என்று அவர் பேசியது சரியான வார்த்தை கிடையாது. அந்த வார்த்தைக்கான அர்த்தம் என்ன என்று நீங்களே உங்கள் அப்பாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். மேடையில் என்னென்ன பேச வேண்டும் என்பதற்கு ஒரு வரம்பு இருக்கிறது, அது உங்களுக்கு ஏன் தெரியவில்லை என்று எனக்கு தெரியவில்லை. பிஜேபி காரர்கள் விளக்கை பிடிக்க சொல்லவில்லை, விளக்கை ஏற்ற சொன்னார்கள், சத்தங்களை போட சொன்னார்கள். அது மனசுக்குள் ஒரு பாசிடிவிட்டியை உருவாக்க வேண்டும் என்பதற்காக அப்படி அவர்கள் செய்யச் சொன்னார்கள். ஆனால், பிஜேபி அதை மட்டும் செய்துவிட்டு விட்டுவிடவில்லை. கொரோனா நேரத்தில் நரேந்திர மோடி அவர்கள் மட்டும் பிரதமராக இல்லை என்றால் என்ன ஆயிருக்கும் என்று என்னால் நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

திருத்திக்கொள்ளுங்கள்: பிஜேபி அந்த நேரத்தில் என்ன செய்தார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் அதற்காக வரலாற்று புத்தகங்கள் எல்லாம் படிக்க தேவையில்லை. The vaccine War என்ற படத்தை, விவேக் அக்ரிகோத்ரி அவர்கள் எடுத்திருக்கிறார் அந்த படத்தை பாருங்கள். அது மட்டுமல்லாமல் இணையத்திலேயே பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன அதை பார்த்து, கொரோனா நேரத்தில் பிஜேபி எந்த அளவிற்கு வேலை பார்த்தது என்று தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் பேசிய அந்த வார்த்தை மிகவும் தவறான வார்த்தை, அதை சரி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால், உங்களுடைய அப்பா சத்யராஜ் அவர்கள் மிகப்பெரிய நடிகர், நல்ல பேச்சாளர். அவர் மீது எனக்கு மிகப்பெரிய அபிமானம் இருக்கிறது. கொள்கை ரீதியாக நான் அவரை எதிர்த்தாலும், அவர் மீது எனக்கு நல்ல மரியாதை இருக்கிறது. இதனால் நீங்கள் இது போன்ற விஷயங்களை எல்லாம் சரி செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என்று ஒரு தோழியாக உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
நகைச்சுவை நடிகர் ஒய். ஜி.மகேந்திரனின் மகளான மதுவந்தி, விஜய் சேதுபதி நடித்த தர்மதுரை படத்தில் பெண் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இவரது கணவர் அருண் பழம் பெரும் நடிகர் ஜெமினி கணேசனின் பேரனாவார்.


Click it and Unblock the Notifications











