கடனை கட்டாததால் வீட்டுக்கு சீல்..வீட்டிலிருந்த பொருள் மாயம்..புகார் கொடுத்த ஒய்.ஜி.மகேந்திரன் மகள்!

சென்னை : வீட்டில் இருந்த 35 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை காணவில்லை என மதுவந்தி தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

மூத்த நடிகர் ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி. மதுவந்தி தர்மதுரை, கடம்பன், ஷிவலிங்கா, தாராள பிரபு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி சீரியலிலும் நடித்திருக்கிறார் மதுவந்தி. அதுமட்டுமின்றி தனது தந்தையின் மேடை நாடகங்களிலும் நடித்து வருகிறார்.

மதுவந்தி

மதுவந்தி

மதுவந்தி சென்னை ஆழ்வார்பேட்டையில் அப்பார்ட்மெண்டை 2016 ஆம் ஆண்டு இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்திடம் இருந்து ஒரு கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தார். வீட்டை வாங்கிய மதுவந்தி மாத தவணையை சரியாக கட்டாததால், இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் பலமுறை பணத்தை கட்டும்படி கேட்டுள்ளது.

வீட்டிற்கு சீல்

வீட்டிற்கு சீல்

ஆனால், மதுவந்தி பணத்தை கட்டவில்லை. மேலும், நிதி நிறுவனம் அனுப்பிய நோட்டிசுக்கும் எந்தவிதமான பதிலையும் அளிக்காததால், இந்துஜா லைலண்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் மதுவந்தி மீது வழக்கு போட்டிருந்தார்கள். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மதுவந்தி செலுத்த வேண்டிய தொகைக்கு அவரின் வீட்டிற்கு சீல் வைக்க உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த ஆண்டு மதிவந்தியின் வீட்டிற்கு போலீசார் பாதுகாப்போடு சீல் வைக்கப்பட்டது.

ஏலம் போன வீடு

ஏலம் போன வீடு

அதன் பின் பைனான்ஸ் நிறுவனம் வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக்கொள்ளுமாறு மதுவந்திக்கு பல முறை சொல்லியும் அவர் பொருட்களை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்ததால், பைனான்ஸ் நிறுவனம் வீட்டை மற்றொரு நபருக்கு ஏலம் விட்டு விட்டது.

ரூ.35 லட்சம் பொருட்களை காணவில்லை

ரூ.35 லட்சம் பொருட்களை காணவில்லை

இந்நிலையில், மதுவந்தி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், அதில் வீட்டை ஏலம் விட்டது தனக்கு தெரியாது என்றும், வீட்டில் இருந்த சுமார் 35 லட்சம் ரூபாய் பொருட்களை காணவில்லை என்றும். காணாமல் போன பொருட்களை மீட்டு தர வேண்டும். வீட்டை ஏலம் விட்ட பைனான்ஸ் நிறுவன மேலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். மதுவந்தி அளித்துள்ள புகார் குறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X