Exclusive: சாதிய படங்களை எடுக்காதீங்க.. வயலென்ஸ் தான் அதிகரிக்கும்.. ஒய்.ஜி. மகேந்திரன் ஓபன் டாக்!
சென்னை: 74 வயதாகும் ஒய்.ஜி. மகேந்திரன் தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் சாதியை வைத்து படங்களை இயக்க வேண்டாம் என்கிற கோரிக்கையை முன் வைத்து பேசியிருப்பது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக சாதிய படங்கள் அதிகம் வருவதை ரசிகர்கள் கொஞ்சமும் விரும்புவதில்லை என அவர் பேசியுள்ளார்.
ஒடுக்கப்பட்டவர்களின் வலிகளை சொல்கிறேன் என ஒரு சில இயக்குநர்கள் படங்களை எடுத்து வருவதும், அதற்கு பதிலடி கொடுக்கிறேன் என இன்னொரு தரப்பு தங்கள் சாதிய பெருமைகளை பேசும் படங்களை எடுப்பதுமாக செல்வது சினிமாவையே அழித்து விடும் என பேசியுள்ளார்.

சினிமா தியேட்டரில் தான் எந்த சாதியினர் என்றெல்லாம் பார்த்து டிக்கெட் வழங்குவதில்லை. அனைவரையும் சமமாக ஒரு அரங்கத்தில் அமர வைக்கிறது. அந்த இடத்திலும் உங்கள் சாதிய வெறியை காட்ட வேண்டாம் என பேசியுள்ளார்.
ஒய்.ஜி. மகேந்திரன்: 1970ம் ஆண்டு பாலசந்தர் இயக்கத்தில் நாகேஷ் நடிப்பில் வெளியான நவகிரகம் படத்தின் மூலம் நடிகராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஒய்.ஜி. மகேந்திரன். நூற்றுக்கு நூறு, கௌரவம், அன்பே ஆருயிரே, மன்மத லீலை, கழுகு, மூன்றாம் பிறை, சகலகலா வல்லவன், நான் சிகப்பு மனிதன், ஸ்ரீ ராகவேந்திரா, ஹே ராம், பைரவா, மாநாடு மற்றும் மார்க் ஆண்டனி என பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை வந்தவர் கவர்ந்தவர் ஒய். ஜி. மகேந்திரன். ஒன் இந்தியா தமிழ் ஃபிலிம் பிட்டுக்கு அவர் அளித்த பிரத்தியேக பேட்டியில் சினிமா குறித்து பல விஷயங்களை பேசியுள்ளார்.
ஜாதிய வச்சு எடுக்காதீங்க: ஒரு சில இயக்குனர்கள் உள்ளனர். அவர்களின் குறிக்கோளை சாதியப் படங்களை எடுப்பதுதான். திரும்பத் திரும்ப ஜாதிய வச்சு படங்களை எடுக்காதீங்க.. அதற்கு பத்திரிகையாளர்களும் ஆதரவு கொடுக்காதீங்க.. நீங்க ஆதரவு கொடுப்பதால் தான் அவர்கள் தொடர்ந்து அதை செய்து வருகின்றனர். சாதிய படங்கள் எடுப்பதால் யாருக்கும் பலன் கிடைக்காது. மாறாக மேலும், வயலன்ஸ் தான் அதிகரிக்கும் என ஒய். ஜி. மகேந்திரன் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.
ரத்தத்துக்கு தான் செலவு: முன்பெல்லாம் எம்ஜிஆர் படங்களில் தான் சண்டைக் காட்சிகள் இருக்கும். அந்த சண்டைக் காட்சிகள் கூட ரசிக்கும்படி தான் அமைந்திருக்கும். ஆனால், இப்போ ரத்தம் தெறிக்கும் அளவுக்கு சண்டைக்காட்சிகள் தான் நிறைந்திருக்கிறது. படத்துக்கு எது வாங்குறாங்க இல்லையோ லாரி லாரியா ரத்தம் வாங்குறாங்க என கலாய்த்துள்ளார் ஒய்.ஜி. மகேந்திரன்.
குட்நைட் படத்துக்கு பாராட்டு: கடந்த ஆண்டு மணிகண்டன் நடிப்பில் தூக்கத்தை வைத்து குட் நைட் படம் வெளியானது. அந்தப் படத்தை பார்க்கவே அவ்வளவு அழகாக நிறைவாக இருந்தது. இப்படி இயக்குனர்கள் புதுசு புதுசாக கதைகளை ரசிகர்களுக்கு படமாக கொடுக்க வேண்டும். என்னைய சாதிய வச்சா மக்கள் பார்த்தாங்க, நான் உங்களை எந்த சாதின்னு கேட்டா பேட்டி தரேன். கலைஞனின் சாதனைகளை தான் பார்க்க வேண்டுமே தவிர சாதியை பார்க்கவும் கூடாது, அடையாளப்படுத்தவும் கூடாது என ஒய்.ஜி. மகேந்திரன் பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











