துப்பாக்கி மாதிரி தூள் கிளப்பும்.. ஏகப்பட்ட ‘கோட்’ அப்டேட்களை சொன்ன ஒய்.ஜி. மகேந்திரன்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் இந்த ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு யுவன் சங்கர் ராஜா இசையில் விஜய் பாடிய விசில் போடு பாடல் வெளியானது.

மதன் கார்க்கி வரிகளில் வெளியான அந்த பாடல் நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை குறிக்கும் விதமாகவும் அதேவேளையில் வெங்கட் பிரபுவின் பார்ட்டி ஸ்டைல் பாடலாகவும் உருவாகி இருப்பது கடும் விமர்சனங்களை கிளப்பியது.

YG Mahendran says GOAT will be like Vijay s Thuppakki movie in quality

மதன் கார்க்கி இது தொடர்பாக அளித்த பேட்டியில், அனைத்து தரப்பினரையும் கவரக்கூடிய பாடலாகவே விசில் போடு பாடல் உருவாக்கப்பட்டுள்ளதாக கூகுள் கூகுள், செல்ஃபி புள்ள பாடல்கள் எப்படி ஆரம்பத்தில் விமர்சிக்கப்பட்டு பின்னர் ரசிக்கப்பட்டதோ அதே போல இந்த பாடலும் ரசிகர்களை நிச்சயம் கவரும் எனக் கூறியுள்ளார்.

சிபிஐ அதிகாரிகள்: நடிகர் விஜய், பிரசாந்த், பிரபுதேவா மற்றும் அஜ்மல் ஆகிய 4 பேரும் சிபிஐ அதிகாரிகள் என்றும் அவர்கள் டீமில் நான் எப்படி நடிக்க முடியும். ஆனால், மாநாடு படத்தை தொடர்ந்து இந்த படத்தில் நடிக்க வேண்டும் என வெங்கட் பிரபு கேட்டுக் கொண்ட நிலையில், இந்த படத்திலும் ஒரு சின்ன வேடத்தில் நடித்திருக்கிறேன். ஆனால், விஜய்யுடன் காம்பினேஷன் காட்சி தான் எனக் கூறியுள்ளார் ஒய்.ஜி. மகேந்திரன்.

துப்பாக்கி படம் போல: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் கோட் திரைப்படம் வழக்கமான ஆக்ஷன் திரைப்படமாக இல்லாமல் துப்பாக்கி படத்தை போல தரமான ஆக்ஷன் படமாக இருக்கும் என ஒய்.ஜி. மகேந்திரன் சமீபத்தில் தமிழ் பிலிமிபீட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அந்த படத்தின் செட்டுக்குள் சென்ற போதே நல்ல கிளாஸான படத்தில் நடிக்க வந்திருக்கிறோம் என புரிந்துக் கொண்டேன் என்றார். விஜய் நடித்த ஆக்‌ஷன் படங்களிலேயே ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம் ரொம்பவே கிளாஸாகவும் மாஸாகவும் இருக்கும். அந்தளவுக்கு கோட் படம் தரமாக இருந்தால் தாறுமாறு ஹிட்டு தான் என ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற விட்டு வருகின்றனர்.

தமிழ்நாடே அதிரும்: இந்த படத்தில் நான் ஒரு வசனம் பேசியிருக்கிறேன். அது எந்தவொரு கட்டும் இல்லாமல் வந்தால், நிச்சயம் தமிழ்நாடே அதிரும் என்றும் அவ்வளவு முக்கியமான விஷயத்தை இந்த படத்தில் வெங்கட் பிரபு கையாண்டிருக்கிறார் என ஒய்.ஜி. மகேந்திரன் கோட் படம் குறித்து கேட்காமலே பல அப்டேட்களை கொடுத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X