மாமாவுக்கு மதுரை.. மருமகனுக்கு லண்டன்.. கார்த்திக் சுப்புராஜின் கேங்ஸ்டர் பிளான் ஒர்க்கவுட்டாகுமா?
தனுஷ் ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தை, கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.
சென்னை: நடிகர் தனுஷின் புதிய படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக உள்ளவர் தனுஷ். இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து மாரிசெல்வராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் தனுஷின் அடுத்தப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். ஒய்நாட் ஸ்டுடியோஸ், என்டர்டெயிண்மன்ட் நிறுவனத்துடன் இணைந்து இப்படத்தை தயாரிக்கிறது.
கேங்ஸ்டர், திரில்லர் வகையைச் சார்ந்த இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடிக்க, இப்படம் முழுவதுமே இங்கிலாந்தில் படமாக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் இத்திரைப்படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவிலேயே வெளியிடப்பட உள்ளது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். கலை வினோத் ராஜ்குமார் கவனிக்க, படத்தொகுப்பு விவேக் ஹர்ஷன் ஏற்றுக் கொள்ள, அன்பறிவ் சண்டைக் காட்சிகளுக்கு பொறுப்பேற்று இருக்கிறார்.

ரஜினியை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இதற்கு முன்பு இயக்கிய பேட்ட திரைப்படம், மதுரையை கதைக்களமாகக் கொண்ட கேங்ஸ்டர் படமாகும். தனுஷை வைத்து லண்டனில் கேங்ஸ்டர் படம் என்றால், துப்பாக்கி தோட்டாக்கள் தெறிக்க தெறிக்க ஒரு ஆக்ஷன் படத்தை கார்த்திக் சுப்புராஜ் தருவார் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











