சைக்கோ.. போதை ஆசாமி.. பல நடிகைகளுடன் கள்ளத்தொடர்பு.. மாமனார் லீலை.. பிரபல பாடகர் மனைவி பகீர் புகார்!

மும்பை: பல பெண்களுடன் கள்ளத் தொடர்பு வைத்திருப்பதாக பாலிவுட் ராப்பரும் பிரபல பாடகருமான ஹிர்தேஷ் சிங் எனும் யோ யோ ஹானி சிங் மீது அவரது மனைவி ஷாலினி தல்வார் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த யோ யோ ஹானி சிங் தான், லுங்கி டான்ஸ் என்ற பிரபல பாடலை பாடி பிரபலம் ஆனார். டெல்லி நீதிமன்றத்தில் அவருக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் விவரித்து 120 பக்க மனுவை , அவர் மனைவி தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 தேனிலவுக்காக மொரீஷியஸ்

தேனிலவுக்காக மொரீஷியஸ்

அந்த மனுவில் 2011 இல் தேனிலவுக்காக, மொரீஷியஸ் சென்ற போது, ​​அவரின் அணுகுமுறை திடீரென எப்படி மாறியது என்பது குறித்து விளக்கமாக அவரது மனைவி குறிப்பிட்டுள்ளார். அதாவது, தனது கணவர் ஹானி சிங் தம்மை உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியாக துன்புறுத்தியதாகவும், 2011-ல் திருமணத்திற்குப் பிறகு மிகவும் கொடுமைப்படுத்தி, கடுமையாக நடத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று கேட்டதற்கு, தன் விருப்பத்திற்கு மாறாக தான், உன்னை திருமணம் செய்து கொண்டேன், என்று மனைவியிடம் கூறியுள்ளார் பாடகர் யோ யோ ஹானி சிங் .

 நீ வாயை மூடு

நீ வாயை மூடு

மேலும் புகார் மனுவில் , மொரீஷியஸ் பயணத்தில் அடிக்கடி குடிபோதையில் இருந்து தன்னை துன்புறுத்தியதாகவும், தன்னை பலமுறை தனியாக விட்டுவிட்டு வெளியே சென்றுவிட்டதாகவும், ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று அவனிடம் கேட்டபோது, ​​ தன்னுடைய முடியை இழுத்து, அறைந்து, 'வாயை மூடு' என்று சொன்னதாகவும் மனைவி ஷாலினி குற்றம் சாட்டியுள்ளார்.

 பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு

பல பெண்களுடன் கள்ளத்தொடர்பு

மொரீஷியசுக்கு பிறகு ஹனி சிங் தனது சுற்றுப்பயணங்களில் தன்னை அழைத்துச் செல்ல மறுத்து, 'பல பெண்களுடன் அடிக்கடி உடலுறவு கொள்ளத் தொடங்கினார்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தான் திருமணமானவர் என்பதை உலகிற்கு வெளிப்படுத்தாத அவர், வைரங்கள் தனக்கு அதிர்ஷ்டம் இல்லை என்று கூறி தனது திருமண மோதிரத்தை கூட அணிய மறுத்தார் என்றும் கூறியுள்ளார்.

 ஆன்லைனில் திருமண படங்கள்

ஆன்லைனில் திருமண படங்கள்

மேலும் ஒரு சமயம், திருமணத்தின் படங்கள் ஆன்லைனில் கசிந்த போது, ​​தன்னை அவர் 'இரக்கமின்றி அடித்ததாகவும்', தான்தான் திருமண புகைப்படத்தை ஆன்லைனில் அப்லோட் செய்தேன் என்று சந்தேகப்பட்டு துன்புறுத்தியதாகவும் கூறியுள்ளார். அதே சமயம் தனக்கு திருமணம் ஆனதை மூடிமறைக்க, அந்தப் படங்களை மார்பிங் செய்து புகைப்படங்கள் திரைப்பட படப்பிடிப்பில் இருந்ததைப் போல தோற்றமளிக்க வைத்தார் என்றும் ஷாலினி கூறியுள்ளார்.

 பெண்ணுடன் தொடர்பு

பெண்ணுடன் தொடர்பு

மேலும், பிரவுன் ரங் மியூசிக் வீடியோவில் அவருடன் பணிபுரிந்த ஒரு பெண்ணுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஷாலினி குற்றம் சாட்டினார். அந்த மனுவில், 'கர்வா சவுத்' அன்று அவருக்காக சாப்பிடாமல் விரதம் இருந்தபோது, ​​அவர் அந்த பெண்ணுடன் துபாயில் உல்லாசமாக இருந்தாக குற்றம் சாட்டியுள்ளார் ஷாலினி.

 முற்றிய விவாதம்

முற்றிய விவாதம்

மேலும் "துபாயில் இருந்து அவர் திரும்பியவுடன், ஒரு பெண்ணுடன் இருந்த அந்தரங்க புகைப்படங்களை தான் காண நேரிட்டது என்றும் இது பற்றி அவரிடம் கேட்ட போது, உன்னோட வேலைய பாரு, என்று தன் மீது 'மது பாட்டில்களை' வீசினார் என்றும் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து தான், வெவ்வேறு பெண்களுடன் தனது கணவர் இருக்கும் ஆபாச படங்களைக் கண்டுபிடித்ததாகக் ஷாலினி கூறியுள்ளார்.

 மாமனார் செய்த லீலை

மாமனார் செய்த லீலை

இது தவிர, தனது மாமனார் மீதும் பாலியல் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அதாவது ஒரு நாள் தான் ஆடைகளை மாற்றி கொண்டு இருந்ததாகவும், அப்போது தனது மாமனார் குடிபோதையில் தான் இருந்த அறைக்குள் நுழைந்து, தனது மார்பில் கைகளை வைக்க முயன்றதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். தன் மீது நடத்தப்பட்ட பல்வேறு குடும்ப வன்முறைச் செயல்களுக்கு தக்க ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும் , ராப்பிற்கு எதிராக உத்தரவுகளை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார்.

 இழப்பீடு கோரிக்கை

இழப்பீடு கோரிக்கை

தான் ஒரு 'பண்ணை விலங்கு போல் கொடூரமாக நடத்தப்பட்டேன்" என்று குறிப்பிட்டு குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் 10 கோடி இழப்பீடு கோரியுள்ளார் ஷாலினி.

 நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம்

நோட்டீஸ் அனுப்பியது நீதிமன்றம்

இதனை தொடர்ந்து, தலைமை மெட்ரோபொலிட்டன் மாஜிஸ்திரேட் தனியா சிங், ஹனி சிங்குக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நொய்டாவில் அவர்கள் கூட்டாக வைத்திருக்கும் சொத்தில் மூன்றாம் தரப்பு உரிமைகளை அந்நியப்படுத்தவோ அல்லது உருவாக்கவோ அல்லது அவரது மனைவியின் நகைகள் மற்றும் பிற பொருட்களை விற்கவோ கூடாது என்று அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.

 5 லட்சம் மாதம் தர கோரிக்கை

5 லட்சம் மாதம் தர கோரிக்கை

மேலும், டெல்லியில் தான் தனியே வசதியுள்ள வீட்டில் வாழவும், தனது விதவை தாயை சார்ந்து இருக்க முடியாத காரணத்தினாலும், தனக்கு ஒவ்வொரு மாதமும் 5 லட்சம் வாடகை வழங்க உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டுள்ளார் யோ யோ ஹானி சிங் மனைவி ஷாலினி தல்வார். இந்த விவகாரம் பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X