ஜென்மாஷ்டமி: கிருஷ்ண பக்தை ஹேமமாலினியின் மன அமைதி தரும் மாஹாமந்திரம்

சென்னை: ஆன்மீகம், தியானம் மூலமாக தான் அமைதியை காண்பதாகவும் ஸ்ரீகிருஷ்ணரின் மஹாமந்திரம் பாடல் மூலமாக தான் பெற்ற அந்த அமைதியை மற்றவர்களும் உணர வேண்டும் என்றும் ஹேமா மாலினி தெரிவித்துள்ளார். ஸ்ரீகிருஷ்ணரின் பக்தையான ஹேமா மாலினி இந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு ஒரு இனிமையான ஆச்சரியத்தை அளித்துள்ளார். தாஸ் நாராயண் எழுதி விவேக் பிரகாஷ் இசையமைத்த கிருஷ்ணர் குறித்த இரண்டு ஆல்பங்களில் பாடியுள்ளார்.

பழம்பெரும் பாலிவுட் நடிகையும், ஆரம்பகாலத்தில் இந்திய திரையுலகின் கனவு கன்னியாகவும் அறிமுகமானவர் நடிகை ஹேமா மாலினி. நடிப்பு மட்டுமின்றி இயக்கம், தயாரிப்பு, நடன கலைஞர் மற்றும் அரசியல்வாதியாகவும் இருப்பவர். இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதையும் பெற்றுள்ளார்.

yoga and meditation gives peasefull-Hema Malini

ஹேமா மாலினி சிறப்பான நடிகை மட்டுமின்றி ஒரு பிரபலமான கிளாசிக்கல் நடன கலைஞர். பல நடன நிகழ்ச்சிகளை மேடையில் நிகழ்த்தியுள்ளார். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அதிலும் அவரது அபிமானம் மிக்க ஸ்ரீகிருஷ்ணர் மீதும் அவரது சித்தாந்தங்கள் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்.

yoga and meditation gives peasefull-Hema Malini

ஸ்ரீகிருஷ்ணரின் வாழ்க்கை வரலாறு குறித்து பல அழகான நடன நிகழ்ச்சிகளை மேடையில் நிகழ்த்தியுள்ளார். மேலும் இஸ்கான் (ISKCON) அமைப்போடு தொடர்புடையவர் ஹேமா மாலினி. தன்னுடைய வாழ்க்கையில் பிரச்சனைகளும், சிக்கல்களும் வந்த போதேல்லாம் ஸ்ரீகிருஷ்ணரையே நோக்கி செல்வேன். அவர் அனைவரையும் சுற்றி இருக்கிறார் மற்றும் அனைவராலும் அணுகக்கூடியவர் என்று பல சமயம் ஸ்ரீகிருஷ்ணா பரமாத்மா மீது உள்ள பற்றை வெளிப்படுத்தியுள்ளார்.

ஸ்ரீகிருஷ்ணரின் பக்தையான ஹேமா மாலினி இந்த கிருஷ்ண ஜென்மாஷ்டமியை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு ஒரு இனிமையான ஆச்சரியத்தை அளித்துள்ளார். தாஸ் நாராயண் எழுதி விவேக் பிரகாஷ் இசையமைத்த கிருஷ்ணர் குறித்த இரண்டு ஆல்பங்களில் பாடியுள்ளார்.

அவருடைய அமைதியான தெய்வீக குரல் நம்மை சுற்றி ஒரு நேர்மறை அதிர்வலைகளை உருவாக்க கூடியது. ஸ்ரீகிருஷ்ண மந்திரம் மற்றும் ஸ்ரீகிருஷ்ண மஹாமந்திரம் எனும் இந்த இரண்டு ஆல்பங்களும் டைம்ஸ் மியூசிக் யூடியூப் சேனலில் 4 நிமிட கிளிப்பிங் பதிவேற்றப்பட்டுள்ளது. மேலும் இதன் 50 நிமிட ட்ராக் அணைத்து ஸ்ட்ரீமிங் தளங்களிலும் கிடைக்கிறது.

இந்த பாடல்களை பாடியது பற்றி ஹேமா மாலினி கூறுகையில். ஆன்மீகம் மூலமாகவும், தியானம் மூலமாகவும் தான் அமைதியை காண்பதாகவும் இந்த பாடல் மூலமாக தான் பெற்ற அந்த அமைதியை மற்றவர்களும் உணர வேண்டும் என்பதற்காக இதை பகிர்வதாகவும் கூறியுள்ளார். அவருடைய பக்தி நிறைந்த இந்த பாடல்களை கேட்டு நாமும் ஸ்ரீகிருஷ்ணரை பிரார்த்திப்போம்.

More from Filmibeat

Read more about: hema malini
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X