twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிர்வாணமாக யோகா செய்ய என்னை அணுகினார்கள்.. குண்டை போடும் பிரபல யோகா குரு!

    |

    சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் நிர்வாண யோகா செய்ய தன்னிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டதாக பிரபல யோகா குரு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    லண்டன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பிரதர் நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு இந்தியில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி பிக்பாஸ்.

    இயக்குநரே முடிவாகல.. அதுக்குள்ள துர்கா பட போஸ்டர்களை வெளியிட என்ன அவசரம் ராகவா லாரன்ஸ்?இயக்குநரே முடிவாகல.. அதுக்குள்ள துர்கா பட போஸ்டர்களை வெளியிட என்ன அவசரம் ராகவா லாரன்ஸ்?

    இந்தியில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி என பல மொழிகளிலும் ஒளிப்பரப்பாகி வருகிறது.

    14 சீசன்கள் நிறைவு

    14 சீசன்கள் நிறைவு

    ஒவ்வொரு மொழியிலும் அந்தந்த மொழியை சேர்ந்த திரைத்துறை உச்ச நட்சத்திரங்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகின்றனர். இந்தியில் 2006 ஆம் ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகி வருகிறது. இந்தி பிக்பாஸ் இதுவரை 14 சீசன்களை நிறைவு செய்துள்ளது.

    பெரும்பாலான சீசன்கள் சல்மான் கான்

    பெரும்பாலான சீசன்கள் சல்மான் கான்

    இதில் ஆரம்பத்தில் அர்ஷத் வர்ஷி, ஷில்பா ஷெட்டி, அமிதாப் பச்சன், ஆகியோர் தொகுத்து வழங்கினர். பின்னர் பெரும்பாலான சீசன்களை நடிகர் சல்மான் கான்தான் தொகுத்து வழங்கியுள்ளார்.

    தமிழில் 4 சீசன்கள் நிறைவு

    தமிழில் 4 சீசன்கள் நிறைவு

    இதேபோல் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சி 8 சீசன்களை கடந்துள்ளது. 8 சீசன்களையும் நடிகர் சுதீப்தான் தொகுத்து வழங்கி வந்துள்ளார். பெங்காலி பிக்பாஸ் இதுவரை 2 சீசன்களை நிறைவு செய்துள்ளது. தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 4 சீசன்களை நிறைவு செய்துள்ளது. 4 சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கியுள்ளார்.

    தெலுங்கில் 5 சீசன் நிறைவு

    தெலுங்கில் 5 சீசன் நிறைவு

    தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்களை நிறைவு செய்துள்ளது. இதனை ஜூனியர் என்டிஆர், நானி மற்றும் அக்கினேனி நாகார்ஜூனா ஆகியோர் தொகுத்து வழங்கியுள்ளனர். மராத்தி மற்றும் மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சிகள் தலா 3 சீசன்களை நிறைவு செய்துள்ளன. மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் மோகன் லால் தொகுத்து வழங்கி வருகிறார்.

    கொரோனா பீதி லாக்டவுன்

    கொரோனா பீதி லாக்டவுன்

    வழக்கமாக ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும். ஆனால் கடந்த இரண்டு சீசன்கள் கொரோனா பீதி மற்றும் லாக்டவுன் காரணமாக இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கவில்லை. இருப்பினும் அதுதொடர்பான தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தது.

    முதலில் ஓடிடி பின்னர் டிவி

    முதலில் ஓடிடி பின்னர் டிவி

    இம்முறை இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சி ஓடிடி தளத்திலும் ஒளிபரப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ஓடிடியில் வெளியாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி அதன் பிறகே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் என கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க பிரபலங்கள் பலருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

    யோகா குரு கிளப்பிய பரபரப்பு

    யோகா குரு கிளப்பிய பரபரப்பு

    மற்ற பிக்பாஸ் நிகழ்ச்சிகளை காட்டிலும் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் சர்ச்சைகள் கொஞ்சம் கூடுதலாகவே இருக்கும். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே பிரபல யோகா குரு பரபரப்பை கிளப்பியுள்ளார். அதாவது ஓடிடியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் தினமும் நிர்வாண யோகா செய்ய வேண்டும் என நிகழ்ச்சி குழு தன்னை அணுகியதாக தெரிவித்துள்ளார்.

    நிர்வாண யோகா - ரூ.50 லட்சம் சம்பளம்

    நிர்வாண யோகா - ரூ.50 லட்சம் சம்பளம்

    அதற்கு விவேக் மிஸ்ரா, ஒரு நாளைக்கு 50 லட்சம் சம்பளமாகக் கொடுத்தால் அவர்கள் விரும்புவதை தான் செய்ய தயாராக இருப்பதாகக் கூறியதாகவும் தெரிவித்துள்ளார். விவேக் மிஸ்ரா நிர்வாண யோகா பயிற்சியாளரும், முன்னாள் பிக் பாஸ் போட்டியாளரும் ஆவார். விவேக் மிஸ்ராவின் இந்த கருத்து பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

    English summary
    The famous yoga guru has created a stir even before the Hindi Big Boss show started. The show crew has approached her to do nude yoga every day on the Big Boss show that airs on OTT. Vivek Mishra has said that he is ready to do what they want if he is paid Rs 50 lakh a day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X