யோகா இஸ் த சீக்ரெட் ஆஃப் மை ஃபிட்னஸ்.. போட்டோ போட்டு சொன்ன கர்ப்பிணி எமி ஜாக்ஸன்!
சென்னை: நடிகை எமி ஜாக்ஸன் தனது கர்ப்பக்கால ஃபிட்னஸ் குறித்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
நடிகை எமி ஜாக்ஸன் தற்போது கர்ப்பமாக உள்ளார். மதராசப்பட்டினம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
பின்னர் விக்ரமுடன் தாண்டவம், ஐ, விஜய்யுடன் தெறி, உதயநிதியுடன் கெத்து, தனுஷுடன் தங்க மகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். சமீபத்தில் ரஜினிகாந்துடன் இவர் இணைந்து நடித்த 2.0 திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

கர்ப்பம்
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் தொழிலதிபர் ஜார்ஜ் பனையோத்துவை காதலிப்பதாக அறிவித்தார். இதைத்தொடர்ந்து மார்ச் மாதம் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறி இன்ப அதிர்ச்சிக் கொடுத்தார் எமி.

திருமணத்துக்கு முன் கர்ப்பம்
திருமணத்துக்கு முன்னரே எமி கர்ப்பமானதால் அவசர அவசரமாக காதலர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்து வைத்தனர் குடும்பத்தினர். இதைத்தொடர்ந்து தனது கர்ப்ப கால போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் எமி ஜாக்ஸன்.
யோகாதான் மீட்பர்
இந்நிலையில் தற்போது ஒரு புதிய போட்டோவை வெளியிட்டுள்ளார் எமி. அதில் கர்ப்ப காலத்தில் நீங்கள் எவ்வாறு ஆரோக்கியமாகவும் ஃபிட்டாகவும் இருப்பீர்கள்? என்று கேட்டுள்ள எமி எனது மனதுக்கும் உடலுக்கும் யோகாதான் மீட்பர் என பதிவிட்டுள்ளார்.

அதிகம் ஷேர்
எமியின் இந்த புதிய கர்ப்ப கால போட்டேவை ஏராளமானோர் லைக் செய்துள்ளனர். பலர் ரீடிவிட் செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











