யோகி பி ஞாபகம் இருக்கா.. ஜன நாயகன் ஆடியோ லாஞ்ச்.. தளபதி கச்சேரியில இவரும் இணைஞ்சிட்டாரு!

சென்னை: மலேசியாவில் இந்த ஆண்டு இறுதியில் புத்தாண்டுக்கு முன்னதாகவே புத்தாண்டு கொண்டாட்டத்தை இசைக் கச்சேரியுடன் கொண்டாடும் முடிவுக்கு தளபதி விஜய் களமிறங்கியுள்ளார். தனது சினிமா ரசிகர்களை இவ்வளவு சீக்கிரத்தில் விட்டுப் பிரிகிறோமே என நினைத்த விஜய் கடைசியாக அவர்களுக்கான ஒரு இசை கச்சேரி நிகழ்ச்சியை ஆடியோ லாஞ்ச் உடன் சேர்த்து நடத்தும் முடிவுக்கு வந்துள்ளார்.

சென்னை நேரு ஸ்டேடியத்தில் எல்லாம் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றால் தேவையில்லாமல், ஏதாவது சர்ச்சை வெடிக்கும், அசம்பாவிதம் நடக்கும் என நினைத்து தான் மலேசியாவில் பிரம்மாண்ட ஸ்டேடியத்தில் இசை வெளியீட்டு விழாவை பிளான் பண்ணியிருக்கிறார் எனக் கூறுகின்றனர்.

Yogi B joins Jana Nayagan Thalapathy Thiruvizha he will perform at Malaysia

எச். வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரியாமணி, பிரகாஷ் ராஜ், நரேன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள ஜன நாயகன் படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரும் நிலையில், அதனை முன்னிட்டு மலேசியாவில் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 27ம் தேதி நடைபெறுகிறது.

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா: லியோ மற்றும் கோட் படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறாமல் இருந்த நிலையில், கரூர் சம்பவத்துக்குப் பிறகு தமிழ்நாட்டில் நிச்சயமாக ஜன நாயகன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாது என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தளபதி விஜய் இந்த முறை மலேசியாவில் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவை வரும் டிசம்பர் 27ம் தேதி கோலாலம்பூரில் உள்ள புகிட் ஜலால் ஸ்டேடியத்தில் பிரமாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தளபதி இசை திருவிழா: தளபதி விஜய் அனிருத் உடன் இணைந்து ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் பாடவும் ஆடவும் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாடகர் திப்பு, பாடகி அனுராதா ஸ்ரீராம், நடிகை ஆண்ட்ரியா, பாடகர் எஸ்.பி. பி. சரண் உள்ளிட்ட பலர் மலேசியாவில் நடைபெறும் 10 மணி நேர நீண்ட இசைத் திருவிழாவில் பாடப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், இன்னொரு சூப்பரான ராப் இசை கலைஞரும் தற்போது தளபதி திருவிழாவில் இணைந்துள்ள அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் அறிவித்துள்ளது.

யோகி பி வந்துட்டாரு: தனுஷின் பொல்லாதவன் படத்தில் "எங்கேயும் எப்போதும்" பாடலை பாடி தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்த யோகி பி தளபதி விஜய்யின் குருவி படத்திலும் பாடல் பாடியுள்ளார். இந்நிலையில், மலேசியாவில் நடைபெறும் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழாவில் அவரும் விஜய் பட பாடலை பாட உள்ளார். அவருடன் இணைந்து டாக்டர் பர்ன் மற்றும் எம்ஸி ஜேஸ் உள்ளிட்ட ராப் இசை பாடகர்களும் பாட உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X