'காலா'வுக்கும் 'விவேகம்' படத்துக்கும் சம்பந்தம் இருக்கு.. டீசர் சர்ப்ரைஸ்!
Recommended Video

சென்னை : சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வெளியாகவுள்ளது. மலேசியா பின்னணியில் 'கபாலி' படத்தை இயக்கிய ரஞ்சித் மும்பை கதையைக் கொண்டு 'காலா' படத்தை இயக்கியுள்ளார்.
'காலா' படத்தின் டீசர் இன்று வெளியாவதாக இருந்தது. ஆனால் காஞ்சி சங்கராச்சாரியாரின் இறுதிச் சடங்கு காரணமாக டீசர் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதாக நடிகர் தனுஷ் ட்விட்டரில் தகவல் வெளியிட்டார்.

'காலா' டீசர் நாளை வெளியாகும் எனவும் அறிவித்தார் தனுஷ். தற்போது லேட்டஸ்ட் அப்டேட்டாக பிரபல ராப் இசை பாடகர் யோகி பி இப்படத்தில் பாடியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. 'காலா' படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் அவர் ராப் பாடகர் யோகி பி உடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். 'காலா' படத்தில் பணியாற்றியதில் மகிழ்ச்சி. சிறந்த மனிதன், வெறித்தனமான திறமையுடையவர். காலா டீசருக்காக பங்களிப்பை கொடுத்ததற்கு நன்றி யோகி பிரதர். பிரித்து மேய்ந்து விட்டீர்கள் ஐயா" எனக் குறிப்பிட்டுள்ளார்.
சந்தோஷ் நாராயணனின் ட்வீட்டை பார்த்தால் யோகி பி இந்தப் படத்தில் செம மாஸாக பாடியிருப்பார் என எதிர்பார்க்கலாம். யோகி பி சமீபத்தில் வெளிவந்த அஜித்தின் 'விவேகம்' படத்தில் பாடி அசத்தியது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











