ப்ளீஸ் நம்புங்க பாஸ்... யோகி பாபுவுக்கு ஜோடியானார் ‘பிக் பாஸ்’ யாஷிகா ஆனந்த்!
பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த், புதிய படத்தில் யோகி பாபுவுடன் நடிக்க இருக்கிறார்.
Recommended Video

சென்னை: யோகி பாபுவுடன் யாஷிகா ஆனந்த் ஜோடி சேர்ந்து நடிக்கும் காமெடி படத்திற்கு ஜாம்பி எனப் பெயரிடப்பட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களுல் ஒருவராக வலம் வருகிறார் யோகி பாபு. முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்து வரும் இவர், சில புதிய படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார்.
அந்தவகையில் புதிய காமெடி படமொன்றில் அவர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இப்படத்தை மோ படத்தை இயக்கிய புவன் நல்லான் இயக்குகிறார். 'எஸ்3' பிக்சரஸ் சார்பில் வசந்த் மகாலிங்கம் , வி .முத்துக்குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

யோகி பாபுவுக்கு ஜோடி:
இப்படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக பிக் பாஸ் புகழ் யாஷிகா நடிக்கிறார். யூ ட்யூப் "பரிதாபங்கள்" புகழ் கோபி சுதாகர் இப்படம் மூலம் அறிமுகமாகிறார். ஆஸ்கர் விருது பெற்ற "லைஃப் ஆஃப் பை "படத்தில் நடித்த T.M..கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . மேலும் மனோபாலா, "கோலமாவு கோகிலா" அன்பு தாசன் ,பிஜிலி ரமேஷ் , ராமர் ,லொள்ளு சபா மனோகர் , "மியூசிக்கலி" புகழ் சித்ரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் .

ஜாம்பி காமெடிப் படம்:
திரில்லர் படங்களில் உலக மக்களை வெகுவாக கவர்ந்த கதாபாத்திரம் ஜாம்பி .திரில்லராகவும் காமடியாகவும் மக்கள் அனைவரையும் ரசிக்கவைத்தது. பிற்காலத்தில் ஜாம்பி காமடி படங்கள் சர்வதேச அளவில் பனோரமாவிலும் திரை உலகிலும் மிகவும் போற்றப்பட்டது. இந்த ஜாம்பியை வைத்து முதன் முறையாக இப்படத்தை தயாரிக்கிறார்கள் .அதற்கு "ஜாம்பி"என்றே பெயரிட்டுள்ளார்கள்.

ஹாரர் காமெடி:
படத்தில் கதாநாயகன், நாயகி என்றில்லாமல், கதை தான் நாயகன், நாயகி மற்றும் வில்லன் என்கின்றனர் படக்குழுவினர். ஒரே இரவில் நடக்கும் ஹாரர் - காமெடியான இப்படத்தில் யோகி பாபுவும், யாஷிகாவும் பரபரப்பான கேரக்டர்களில் நடிக்கிறார்களாம்.

பிரேம்ஜி இசை:
வெங்கட் பிரபுவின் "பார்ட்டி "படத்திற்கு பிறகு பிரேம்ஜி இப்படத்திற்கு இசை அமைக்க இருக்கிறார். விக்ரம் மோகன் ஒளிப்பதிவு செய்ய ,கண்ணன் கலை அமைக்க ,தினேஷ் எடிட்டிங் செய்ய ,ஓம் பிரகாஷ் சண்டை பயிற்சி அமைக்கிறார். நாளை (டிசம்பர் 13-ம் தேதி) இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்குகிறது.


Click it and Unblock the Notifications











