குழலூதும் கண்ணனாக யோகி பாபு குத்தாட்டம்... காவி ஆவி நடுவுல தேவி
Recommended Video
சென்னை: காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாக யோகி பாபுவும் காதலர்களை பிரித்து வைக்கும் தாதாவாக மொட்டை ராஜேந்திரனும் நடித்துள்ள முழு நீள நகைச்சுவை நிறைந்த காவி ஆவி நடுவுல தேவி படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1973ஆம் ஆண்டு வெளியாகி காமெடியில் கலக்கிய படம் காசி யாத்திரை. இந்தப் படத்திற்கு கதை எழுதியவர் குகநாதன். எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இப்படத்தில் காமெடி நடிகர்களான வி.கே.ராமசாமி, சோ.ராமசாமி, தேங்காய் சீனிவாசன், சுருளிராஜன், மனோரமா, டைப்பிஸ்ட் கோபு என நகைச்சுவை பட்டாளமே நடித்திருந்தனர். தற்போது 46 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் இரண்டாம் பாகமாக காவி ஆவி நடுவுல தேவி என்னும் பெயரில் தயாரிக்கின்றனர்.

தம்பி ராமையா, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி நால்வரும் இணைந்து நகைச்சுவையில் பின்னி பெடலெடுக்கும் படம் தான் காவி ஆவி நடுவுல தேவி. மனோன்ஸ் சினி கம்பைன் சார்பில் ஆருரான் தயாரிக்கும் இதன் கிராபிக்ஸ் காட்சிகள் பிரமிப்பூட்டும் வகையில் தயாராகி உள்ளது.
மேலும் இதில் கதாநாயகனாக ராம் சுந்தர் அறிமுகமாக இவரின் ஜோடியாக பிரியங்கா நடிக்கிறார். சிவசங்கர், வேல்சிவா, ரிஷா, சிவகாமி, வாணி, டக்ளா ராமு, தீபலட்சுமி இன்னும் பலர் இந்தப் படத்தில் பங்கு பெற்றுள்ளனர்.
குழலூதும் கண்ணனாக நடிக்கும்யோகி பாபு ஆவியாக வந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட நடன அழகிகளுடன் கவர்ச்சி நடனமாடி பாடிய
"இந்திரன் கெட்டதும் பிகராலே... சந்திரன் கெட்டதும் பிகராலே"என்ற பாடலுக்கான காட்சிகள் சிவசங்கர் மாஸ்டர் நடனம் சொல்லி கொடுக்க படமாக்கப்பட்டது.
இந்தப் படத்தில் யோகி பாபு காதலர்களை சேர்த்து வைக்கும் கண்ணனாகவும், காதலர்களை பிரித்து வைக்கும் தாதாவாக மொட்டை ராஜேந்திரனும், மலையாள மாந்தீரகனாக இமான் அண்ணாச்சியும், பஸ் கம்பெனி முதலாளியாக தம்பி ராமையாவும் நடித்துள்ளனர். இவர்கள் மூவரும் சேர்ந்து அடிக்கும் லூட்டி பட்டையை கிளப்பும் என்கிறார் இப்படத்தின் கதாசிரியரான வி.சி.குகநாதன். இவர் ஏற்கனவே மனிதன், மைனர் மாப்பிள்ளை உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார்.
சூப்பர் சுப்பராயன் சண்டை பயிற்சியையும். வி.சி.குகநாதன் கதையையும். கணேசன் ஒளிப்பதிவையும், ராஜ் கீர்த்தி படத்தொகுப்பையும், டாக்டர் ஹிருதயா, ஜீவன் மயில் இருவரும் பாடல்களையும், தயாரிப்பு நிர்வாகத்தை கே.தமிழ்செல்வன், எம்.சரவணனும், மேற்பார்வையை ஜெ.துரையும், கவனிக்கின்றனர் படப்பிடிப்பு முற்றிலும் நிறைவு பெற்றது. விரைவில் திரைக்கு வர உள்ள காவி ஆவி நடுவுல தேவி படத்தின் வசனம் எழுதி இயக்கி வருகிறார் இயக்குனர் புகழ்மணி.


Click it and Unblock the Notifications











