நட்பை மறக்காத நடிகர்.. சம்பளம் வாங்காமல் படக்குழுவினரை நெகிழ வைத்த யோகி பாபு.. குவியும் பாராட்டு!

சென்னை: நட்புக்காக சம்பளமே வாங்காமல் நடித்துக் கொடுத்த நடிகர் யோகி பாபுவை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

Recommended Video

Yogi Babu சொந்த ஊரில் Cricket விளையாடிய Video வைரலாகியுள்ளது | Mandela, Karnan

தமிழ் சினிமாவில் டாப் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார்.

அண்மையில் அவரது நடிப்பில் வெளியான மண்டேலா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நட்புக்காக தான் நடித்த படம் ஒன்றுக்கு சம்பளமே வாங்காமல் படக்குழுவினரை நெகிழச் செய்துள்ளார் யோகி பாபு.

டான்ஸ் மாஸ்டர் தினேஷ்

டான்ஸ் மாஸ்டர் தினேஷ்

தனி ஒருவன், தில்லுக்கு துட்டு உட்பட 25க்கும் மேற்பட்ட படங்களுக்கு படத்தொகுப்பாளராக பணியாற்றியவர் கோபி கிருஷ்ணா. இவர் தயாரிப்பில் டான்ஸ் மாஸ்டர் தினேஷ் நடிப்பில் உருவாகும் படம் 'நாயே பேயே'.

படக்குழுவினர் அதிர்ச்சி

படக்குழுவினர் அதிர்ச்சி

இந்த படத்தை சக்திவாசன் இயக்கி உள்ளார். ஐஸ்வர்யா, 'ஆடுகளம்' முருகதாஸ், புச்சி பாபு, ரோகேஷ், கிருஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் யோகி பாபுவை நடிக்க வைக்க படக்குழுவினர் முயற்சி செய்தனர்.

சம்பளம் வாங்கவில்லை

சம்பளம் வாங்கவில்லை

ஆனால் ஏற்கனவே ஒப்பந்தமான படங்களில் பிஸியாக உள்ள யோகி பாபு, இந்தப் படத்தின் ஒரு விளம்பர பாடலுக்கு மட்டும் நடித்து கொடுத்துள்ளார். இதற்காக அவர் சம்பளமே வாங்காமல் படக்குழுவை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளார்.

மறக்கவே மாட்டோம்

மறக்கவே மாட்டோம்

பிஸியாக உள்ள போதும் நட்புக்காக யோகி பாபு செய்த இந்த உதவியை மறக்கவே மாட்டோம் என படக்குழுவினர் உருகியுள்ளனர். யோகி பாபு நடித்துள்ள பாடல் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதோடு வியாபாரத்துக்கும் உதவியுள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

10க்கும் மேற்பட்ட படங்கள்

10க்கும் மேற்பட்ட படங்கள்

கலகலப்பான குடும்ப படமாக உருவாகி இருக்கும் நாயே பேயே படம் வரும் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர் யோகி பாபு, டாக்டர், வலிமை, தளபதி 65 உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X