நயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு! ஐராவிலும் கலக்குகிறார்!

நயன்தாராவின் ஐரா படத்திலும் யோகிபாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

Recommended Video

நயன்தாராவை விடாமல் துரத்தும் யோகிபாபு. ஐராவிலும் சேரும் ஜோடி!- வீடியோ

சென்னை: நயன்தாராவின் ஐரா திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் யோகிபாபு நடிக்கிறார்.

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சர்ஜன் இயக்கும் படம் ஐரா.

Yogi Babu again act with Nayanthara!

இப்படத்தில் நயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். ஹாரர் த்ரில்லர் படமாக இப்படம் தயாராகிறது. ஐரா என்றால் யானைகளின் அரசன் என்று அர்த்தமாம். பல யானைகளின் அரசனாக இருக்கும் ஒரு யானையின் பலம்பொருந்தியவள் போன்ற ஒரு கதாபாத்திரம்தான் நயன்தாராவின் கதாபாத்திரம் என சொல்லப்படுகிறது.

கோலமாவு கோகிலா திரைப்படத்திற்கு பிறகு இப்படத்தில் யோகிபாபு நயன்தாராவுடன் நடிக்கிறார். யோகிபாபுவிற்கு இப்படத்தில் மிகக்குறைவான காட்சிகளே இருந்தாலும் அது மிக முக்கியமான கதாபாத்திரம் என இயக்குனர் தெரிவித்திருக்கிறார்.

ஹாரர் படங்களில் ஆங்காங்கே மழைச்சாரல் போல தூவப்பட்டிருக்கும் காமெடிபோல இப்படத்தில் இருக்காது. முழுக்க முழுக்க பயமூட்டக்கூடிய வகையில் ஹாரராகவே இருக்கும் என்கிறார் சர்ஜன்.

இப்படத்தில் கலையரசன், ஜெயப்பிரகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விஸ்வாசம் திரைப்படத்தின் தமிழக திரையரங்க உரிமையை வாங்கியுள்ள கேஜேஆர் ஸ்டுடியோ இப்படத்தை கிறிஸ்துமஸுக்கு ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X