யோகிபாபுவை இயக்கும் செல்வராகவனின் பெண் உதவி இயக்குநர்... விரைவில் அறிவிப்பு

சென்னை : காமெடி நடிகர் யோகிபாபு அடுத்தடுத்து, ரஜினி விஜய், அஜித் என பிசியாக நடித்து வருகிறார்.

Recommended Video

Yogi Babu Cricketer Natarajan சந்திப்பில் நடந்த செம்ம கலாட்டா | IPL

இவர் ஹீரோவாக நடித்த மண்டேலா படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த லதா என்பவர் இயக்கவுள்ள படத்தில் யோகிபாபு ஹீரோவாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

காமெடி நடிகர் யோகிபாபு ரஜினிகாந்த், அஜித், விஜய் என தொடர்ந்து முக்கிய நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார். அவருடைய கால்ஷீட்டிற்காக காத்திருந்து இயக்குநர்கள் அவரை தொடர்ந்து புக் செய்து வருகின்றனர். மேலும் சில படங்களில் அவர் ஹீரோவாகவும் நடித்து வருகிறார்.

ஹீரோவான யோகிபாபு

ஹீரோவான யோகிபாபு

சமீபத்தில் இவரது நடிப்பில் மண்டேலா படம் ஓடிடியில் வெளியாக சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. மேலும் சமுத்திரகனி நடிப்பில் சமீபத்தில் வெளியான வெள்ளை யானை படத்திலும் முக்கியமான நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரத்தில் யோகிபாபு நடித்துள்ளார்.

மீண்டும் யோகிபாபு ஹீரோ?

மீண்டும் யோகிபாபு ஹீரோ?

இந்நிலையில் தற்போது செல்வராகவனின் உதவி இயக்குநர் லதா என்பவர் புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளதாகவும் அதில் யோகிபாபு ஹீரோவாக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படம் இயக்கிய கீதாஞ்சலி

படம் இயக்கிய கீதாஞ்சலி

தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது படங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துபவையாக உள்ளன. ஏற்கனவே இவரிடம் இயக்கம் குறித்து கற்ற இவரது மனைவி கீதாஞ்சலி, மாலை நேரத்து மயக்கம் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் தற்போது இவரது உதவி இயக்குநர் லதா படம் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X