விஜய் 63... இந்த படத்துல 'இவர்' என்ன பிரச்சினை செய்ய போகிறாரோ தெரியலையே!

விஜய்யின் 63வது படத்தில் காமெடி நடிகர் யோகி பாபு நடிப்பது உறுதியாகியுள்ளது.

Recommended Video

விஜய் 63 படத்தில் விவேக்குடன் இணைந்த மற்றொரு காமெடி நடிகர்- வீடியோ

சென்னை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் காமெடி வேடத்தில் யோகி பாபுவும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இந்த படத்திற்கு தற்காலிகமாக தளபதி-63 என பெயர் வைத்துள்ளனர்.

ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் ஹீரோயின் மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்கள் யார் என்ற விபரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

விவேக் உறுதி

விவேக் உறுதி

சமீபத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட விவேக், தளபதி 63 படத்தில் நடிப்பதை உறுதி செய்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விவேக், விஜய்யுடன் இப்படத்தில் சேர்ந்து நடிக்கிறார்.

விவேக் மட்டுமல்ல

விவேக் மட்டுமல்ல

இந்நிலையில், தளபதி 63 படத்தில் காமெடிக்கு விவேக் மட்டுமல்ல இன்னுமொரு நடிகரும் இருப்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர் வேறு யாருமல்ல, தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களுள் ஒருவராக இருக்கும் யோகி பாபு தான்.

விரைவில் அறிவிப்பு

விரைவில் அறிவிப்பு

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. ஏற்கனவே விஜய்யுடன் சர்கார் படத்திலும் யோகி பாபு நடித்திருந்தார்.

இந்த படத்தில் என்ன பிரச்சினை

இந்த படத்தில் என்ன பிரச்சினை

சர்கார் படத்தில் விஜய்யின் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டு, பிரச்சினைக்கு வழிவகுத்தவர் யோகி பாபு தான். எனவே இந்த படத்தில் என்ன பிரச்சினை செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X