யோகி பாபு உடன் காட்டுக்குள் ஜாலி ட்ரிப் அடிக்கும் கருணாகரன் கூடவே சுனைனா
Recommended Video
சென்னை: காமெடி நடிகர்கள் யோகி பாபு, கருணாகரன் கூட்டணியில் உருவாகிறது ட்ரிப் . இது அறிவியல் சார்ந்த நகைச்சுவை திரைப்படமாம். இதில் இவர்கள் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கபோறாங்களாம். ஒரு காட்டை சுற்றி நடக்கவிருக்கும் பயணத்தை பற்றிய கதைதான் ட்ரிப். காட்டுக்குள் இரு குழுக்கள் செல்கிறது. அதில் யோகி பாபுவும் கருணாகரனும் ஒரு குழுவாகவும், சுனைனா மற்றும் பிரவீன் மற்றுமொரு குழுவாகவும் காட்டுக்குள் பயணிக்கின்றனர் அவர்களை சுற்றி கதை நகர்கிறது.
யோகி பாபு தற்போது தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான காமெடி நடிகராக மாறிவிட்டார். அவரது பிஸி ஷெட்யுலில் மற்றுமொரு படமும் இணையவிருக்கிறது.

யோகி பாபு, கருணாகரன் ஜோடியில் ட்ரிப் என்று பெயரிடப்பட்ட ஒரு அறிவியல் சார்ந்த நகைச்சுவை திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளது. இப்படத்தில் இவர்கள் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவிருக்கின்றனர்.
சாய் ஃபிலிம் ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.விஸ்வநாதன் மற்றும் பிரவீன் குமார் தயாரிப்பில் உருவாகும் ட்ரிப் திரைப்படத்தின் பூஜை செப்டம்பர் 12ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்த பூஜையில் படக்குழுவினர் கலந்து கொண்டனர். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 16ஆம் தேதி முதல் தலக்கோணம் காட்டுப்பகுதியில் துவங்கப்படவுள்ளது.
இப்படத்தில் காதலில் விழுந்தேன் மூலம் பிரபலமான நடிகை சுனைனா நடிக்கவுள்ளார். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பிரவீன் என்பவர் இப்படம் மூலம் நடிகராக அறிமுகமாகிறார். சுனைனாவிற்கு ஜோடியாக பிரவீன் ரொமான்ஸ் செய்ய உள்ளார்.

சாம் அன்டன்னின் உதவியாளராக பணிபுரிந்த டென்னிஸ் இப்படத்தை இயக்குகிறார். ஸ்கிரிப்ட் மிகவும் சுவாரஸ்யமாகவும் அதை இயக்குனர் டென்னிஸ் கூறுகையில் மிகவும் ஆர்வமாக இருந்தது என்று கூறுகிறார் படத்தின் கதாநாயகி சுனைனா.
இக்கதை ஒரு காட்டை சுற்றி நடக்கவிருக்கும் பயணத்தை பற்றியதாகும். காட்டுக்குள் இரு குழுக்கள் செல்கிறது. அதில் யோகி பாபுவும் கருணாகரனும் ஒரு குழுவாகவும், சுனைனா மற்றும் பிரவீன் மற்றுமொரு குழுவாகவும் காட்டுக்குள் பயணிக்கின்றனர். அவர்களை சுற்றி கதை நகர்கிறது.

வழக்கமான கமர்சியல் படத்தின் காதல் போல் இல்லாமல் சற்று வித்தியாசமான நட்புக்காக இருக்கும் என்கிறார் தயாரிப்பாளரில் ஒருவரும் படத்தின் கதாநாயகனுமான பிரவீன். அதர்வா நடித்த 100 படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பிரவீன். இப்போது கதாநாயகனாக களமிறங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











