'என்னது காமெடிக்கு இவ்வளவா'... யோகி பாபுவின் சம்பளத்தை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்!

காமெடி நடிகர் யோகி பாபு தனது சம்பளத்தை ஒரு கோடி ரூபாயாக உயர்த்தி இருப்பது தெரியவந்துள்ளது.

Recommended Video

தளபதி 63 படத்தில் நடிக்க பெரிய தொகை கேட்கும் யோகிபாபு- வீடியோ

சென்னை: காமெடி நடிகர் யோகி பாபு கேட்கும் சம்பளத்தை தர முடியாமல் சிறு தயாரிப்பாளர்கள் பலர் தெறித்து ஓடும் தகவல் கசிந்துள்ளது.

தமிழ் சினிமாவில் தற்போது காமெடிக்கு வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த ஆண்டு வெளியான பெரும்பாலான படங்களில் காமெடி ஒர்கவுட்டாகவில்லை.

ஒரு சில படங்களில் மட்டுமே காமெடி களைகட்டியது. அதன் காரணமாகவே இந்த ஆண்டு வெளியான படங்களில் காமெடி படங்கள் மிகக்குறைவு.

முன்னணி காமெடியன் யோகி பாபு

முன்னணி காமெடியன் யோகி பாபு

இந்நிலையில் யோகி பாபு நடித்த படங்களில், அவரது கவுண்டரை கேட்டு ரசிகர்கள் சிரித்து மகிழ்ந்தனர். இதனால் முன்னணி காமெடியனாக அவர் உயர்ந்துள்ளார். கோலமாவு கோகிலாவில் அவரது காமெடி வெகுவாக பாராட்டப்பட்டது.

அதிக படங்கள்

அதிக படங்கள்

இவரை தவிர சூரி, ரோபோ சங்கர், சதீஷ் உள்ளிட்டோர் ஓரளவுக்கு காமெடி செய்வதால், இவர்களுக்கும் பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் வெளியாகும் பெரும்பாலான படங்களில் யோகி பாபு தான் இடம்பெற்றுள்ளார்.

ஹீரோ யோகி பாபு

ஹீரோ யோகி பாபு

மேலும், கூர்கா, தர்மபிரபு உள்ளிட்ட படங்களில் கதையின் நாயகனாக அவர் நடித்து வருகிறார். இதனால் காற்றுள்ளபோதே தூற்றிக்கொள் எனும் பழமொழிக்கு ஏற்ப யோகி பாபு தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

சம்பளம் ஒரு கோடி

சம்பளம் ஒரு கோடி

ஒரு முழுபடத்துக்குமான கால்சீட் தர, அவர் ரூ.1 கோடி சம்பளம் கேட்பதாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகிறது. இதனால் சிறு தயாரிப்பாளர் பலர் அவரை அணுகவே தயங்குகின்றனர். ஒருவேலை நிறைய படங்களில் நடித்து வருவதாலும் பிசியாக இருக்கும் யோகி பாபு, பட வாய்ப்புகளை தவிர்ப்பதற்காக இவ்வாறு சம்பளம் கேட்கிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.

யோகி பாபு காட்டில் அடைமழை

யோகி பாபு காட்டில் அடைமழை

எது எப்படி இருந்தாலும், இன்றைய சூழலில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக விளங்கும் யோகி பாபுவின் காட்டில் தான் அடைமழை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X