இன்றும் டீ குடிக்க அங்கு தான் போகிறேன்.. பழசை மறக்காத யோகிபாபு !

சென்னை : இன்றும் பிரசாத் ஸ்டூடியோ பின்புறம் உள்ள டீ கடையில் தான் டீ குடிக்கிறேன் நான் எதையும் எளிதில் மறக்கக்கூடியவன் இல்லை என்று யோகி பாபு கூறினார்.

யோகிபாபு தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியனாக உருவெடுத்து இருக்கிறார். யோகிபாபு வருடம் முழுவதும் பிஸியாக இருக்கும் அளவுக்கு நிறைய படங்கள் அவரின் கைவசம் உள்ளன. முன்னணி நாயகர்களின் ஆஸ்தானா காமெடியனாகவும் மாறியிருக்கிறார் .

yogi babu award function speech

யோகிபாபு கடந்த வருடம் கோமாளி படத்தில் நடித்து பலரின் பாராட்டை பெற்றிருந்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய காரணத்திற்காக யோகிபாபுவுக்கு சிறந்த துணை நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை மற்றொரு சிறந்த காமெடியனான ரோபோ சங்கர் வழங்கினார் .

மேடையில் பேசிய யோகிபாபு, கோமாளி படப்பிடிப்பின் போது நான் நிறைய கிண்டல்களை செய்வேன் அது படப்பிடிப்புக்கு மிக தொந்தரவாக இருந்தது. ஜெயம் ரவி என்னை அழைத்து படத்தில் சொல்லுறத செய்யுங்க உங்களுக்கு விருது கட்டாயம் கிடைக்கும் என்றார். அதே போல விருது வென்று இருக்கிறேன் என்று கூறி ஜெயம் ரவிக்கு நன்றி தெரிவித்தார் .

yogi babu award function speech

மேலும் யோகிபாபுக்கு கோலமாவு கோகிலா படத்தின் மூலம் மூன்று விருதுகள் கிடைத்தது. அதனை பற்றி மேடையில் பேசிய யோகிபாபு சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறினார். ஏனெனில் சிவகார்த்திகேயனால் தான் அந்த வாய்ப்பு கிடைத்தது என்று கூறினார் .

yogi babu award function speech

மேலும் 2019ல் யோகிபாபுக்கு மறக்கமுடியாத படம் என்றால் அது பிகில் படத்தையும் கூறலாம். அந்த படத்தில் வரும் காமெடி காட்சி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து இருக்கும். அந்த படத்தில் யோகிபாபு கால்பந்து வீரராக நடித்து இருப்பார். யோகிபாபுவை உற்சாகப்படுத்தும் நோக்கில் நடன இயக்குனர் பிக்பாஸ் புகழ் சாண்டி மேடையில் யோகிபாபுவுடன் கால்பந்து விளையாடினார்.

yogi babu award function speech

வாய்ப்புத் தேடி அலைந்த போது எப்படி பிரசாத் ஸ்டூடியோ பின்புறம் உள்ள டீ கடையில் டீ குடித்தேனோ. அதே போலத்தான் இப்போதும் நேரம் கிடைக்கும் போது, அங்கு சென்று டீ குடிக்கிறேன். நான் எதையும் எளிதில் மறக்கக்கூடியவன் இல்லை என்று யோகி பாபு கூறினார். முன்னணி நட்சத்திரமாக வளர்ந்தும் தற்போதும் எளிமையுடன் யோகிபாபு இருக்கிறார் என்று பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X