யோகி பாபுவின் போட்.. நேரம் தான் வீணாப்போச்சு..ப்ளு சட்டை மாறன் விமர்சனம்!
சென்னை: சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு நடித்து வெளியாகியுள்ள திரைப்படம் போட். இப்படத்தில் யோகிபாபு உடன் எம்.எஸ்.பாஸ்கர், கெளரி கிஷான்,ஷா ரா, சாம்ஸ், மதுமிதா, சின்னி ஜெயந்த் ஆகியோரின் நடித்துள்ளனர். இப்படம் குறித்து ப்ளூ சட்டை மாறனின் விமர்சனத்தை பார்க்கலாம்.
போட் திரைப்படம் இரண்டாம் உலகப்போரின் இறுதி கட்டத்தில் அதாவது 1943 கால கட்டத்தில் படம் ஆரம்பிக்கிறது. ஜப்பான் இந்தியாவில் இருக்கும் பெரிய நகரம் மீது குண்டு வீசி அழிக்கப்போவதாக தகவல் வெளியாகிறது. இந்த நேரத்தில் மெட்ராஸ் மீதும் குண்டு போடப்போவதாக தகவல் தர. இந்த குண்டு வெடிப்பில் இருந்து தப்பிக்க சில நாட்கள் கடலில், இருக்கலாம், பிரச்சனை எல்லாம் முடிந்த பிறகு திரும்பி வரலாம் என்று, யோகி பாபு தனது பாட்டியை கூட்டிக்கொண்டு போட்டில் கடலுக்கு செல்கிறார்.

யோகி பாபுவின் போட்: அந்த நேரம் பலர் உதவி கேட்டு வர அவர்களும் அந்த போட்டில் பயணம் செய்கின்றனர். போட் நடு கடலில் சென்று கொண்டு இருக்கும் போது, கப்பல் விபத்தில் சிக்கிய வெள்ளைக்காரனும் அந்த போட்டியில் ஏறி விடுகிறார். அந்த படகில் பயணம் செய்யும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வையும், எண்ணமும் இருக்கிறது. கடைசியில் அவர்கள் அனைவரும் போர் முடிந்து கரை சேர்ந்தார்களா... இல்லையா என்பது தான் போட் படத்தின் கதை.
படத்தின் மைனஸ்: இந்த படம் ஆரம்பிக்கும் போதே old man on a boat என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்ட படம் என்றும், 12th angry man படத்தின் இன்பிரேஷன் என்று சொல்லி இருக்கிறார்கள். 12th angry man படத்தில் இருக்கும் பலரும் பல கருத்தை பேசி, இறுதியில் ஒருவர் சொன்னது தான் சரி என அந்த 12 பேரும் மனமாற்றம் அடைவது தான் கதையாக இருக்கும். ஆனால், போட் படத்தில் வெவ்வெறு எண்ணம் கொண்ட அனைவரும் கரைசேரும் போது மனம் மாற்றம் ஏற்பட்டுச்சா என்றால், அப்படி எதுவும் ஏற்படவில்லை. இதுவே படத்திற்கு பெரிய மைனசாக அமைந்துவிட்டது.

இயல்பாக இல்லை: படகில் பயணம் செய்யும் போது சாதி, மதம், வன்முறை, அரசியல் என அனைத்து பற்றியும் பேசுகிறார்கள். இவை எல்லாமே இயல்பாக இல்லாமல் வலுக்கட்டாயமாக புகுத்தியது போல படத்தில் அப்பட்டமாக தெரிந்தது. அதே போல படத்தின் சுவாரசியத்தை கூட்டுகிறேன் என்று படகில் ஓட்டை என்று சொல்லி ஒரு சில காட்சியை நகர்த்திவிட்டு பின், திமிங்கலம் அந்த படகை சுத்தி வருகிறது. இந்த காட்சியை பார்ப்பதற்கே மிகவும் போரடித்தது. அதே போல யோகி பாபுவின் நடிப்பு சொல்லிக் கொள்ளும் அளவிற்கு இல்லை.
நேரம் தான் வீண்: படத்தின் ஆரம்பம் நன்றாக இருந்து நல்ல படத்திற்கு வந்து இருக்கிறோம் என்கிற நம்பிக்கையை கொடுத்தது. அதே போல படமாக்கப்பட்ட விதம், படத்தின் கிராபிக்ஸ் என அனைத்தும் நன்றாக இருந்தது. ஆனால், படத்தில் கதையும் திரைக்கதையும் இல்லாததால், நேரம் தான் வீணானது என்று ப்ளூ சட்டை மாறன போட் படம் குறித்து தனது விமர்சனத்தை பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











