அம்மா பெயரில் பிரமாண்ட பங்களா: சத்தமில்லாமல் குடியேறிய யோகி பாபு
Recommended Video

தன் அம்மா பெயரில் பங்களா கட்டிய நடிகர் யோகி பாபு- வீடியோ
சென்னை: நடிகர் யோகி பாபு தன் அம்மா பெயரில் பங்களா கட்டி குடியேறியுள்ளார்.
இன்றைய தேதிக்கு கோலிவுட்டின் பிசியான நகைச்சுவை நடிகர் என்றால் அது யோகி பாபு தான். அவர் கையில் 15க்கும் மேற்பட்ட படங்கள் உள்ளன. அவர் தனது சம்பளத்தையும் உயர்த்தியுள்ளார்.

கோடிகளில் சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யோகிபாபு சென்னையில் பெரிய பங்களா கட்டியுள்ளார். அந்த பங்களாவுக்கு தனது அம்மா விசாலாட்சியின் பெயரை வைத்துள்ளார்.
புதுமனை புகுவிழாவை சத்தமில்லாமல் நடத்தியுள்ளார். அந்த விழாவுக்கு சென்ற நடிகை ஆர்த்தி அங்கு எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு வாழ்த்தியுள்ளார்.
யோகிபாபுவின் வீட்டை பார்த்தாலே பிரமாண்டமாக உள்ளது. வாழ்த்துக்கள் யோகிபாபு.


Click it and Unblock the Notifications











