அப்போ விஜய் சொன்னது இப்போதைக்கு நடக்காதா? திருமணம் குறித்து இப்படி சொல்லிட்டாரே யோகி பாபு!
சென்னை: தமிழ் சினிமாவில் தற்போது காமெடியில் கலக்கி வருகிறார் யோகி பாபு. வார வாரம் ரிலீசாகும் படங்களில் யார் இருக்கிறார்களோ இல்லையோ, யோகி பாபு ஒரு நிமிட காட்சியிலாவது தலை காட்டி செல்கிறார்.
அந்த அளவுக்கு தற்போது யோகி பாபுவின் மார்க்கெட் உச்சத்தில் இருக்கிறது. 34வயதாகும் யோகி பாபு ஒரு பெண்ணுடன் இணைந்திருக்கும் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த பெண்ணைத் தான் யோகி பாபு திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற வதந்தி பரவி வரும் நிலையில், அது வெறும் வதந்தி தான் தனது திருமணம் குறித்து இன்னும் முடிவாகவில்லை என யோகி பாபு விளக்கமளித்துள்ளார்.

யோகக்கார யோகி பாபு
பன்னி மூஞ்சி வாயா என காமெடியில் கலாய்க்கப்பட்ட யோகி பாபு, நயன்தாராவுடன் டூயட் பாடும் அளவுக்கு வளர்ந்துள்ளார். மேலும், பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடித்து வரும் படத்திலும் யோகி பாபு நடிக்கப்போவதாக தகவல்கள் வெளி வந்துள்ளன. இப்படி சினிமாவில் வெகு விரைவாக யோகி பாபுவுக்கு ராஜயோகம் அடித்து வருகிறது.

விஜய் சொன்னது
பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய், யோகி பாபு குறித்து பேசும் போது, யோகி பாபு கட்டிய புது வீட்டின் கிரகப் பிரவேசத்துக்கு கூட அவரால் போக முடியாத அளவுக்கு ஷூட்டிங்கில் பிசியாகி இருந்தார் என்றும், வீடு யாரு வேணா கட்டலாம் யோகி, தாலி நீங்க தான் கட்டணும் என சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோங்க என்பதை சூசகமாக கூறினார்.
வதந்தி
ஹலோ ஆப்பில் யோகி பாபு பெயரில் ஒரு போலி ஐடி உலவி வருகிறது. அதில், அவளும் நானும் என கேப்ஷன் போட்டு ஒரு பெண்ணுடன் இருக்கும் புகைப்படம் வெளியானது. உடனே யோகி பாபு இவரைத்தான் திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்ற வதந்தி வைரலாக பரவியது.
நானே சொல்வேன்
இந்த வதந்தி வைரலாகி வருவதை அறிந்த யோகி பாபு, தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில், ' என் கல்யாணம் பற்றிய தவறான தகவல்கள் பரவி வருகிறது. அது வெறும் வதந்தியே. எனது கல்யாணம் முடிவானதும் நானே அனைவருக்கும் முறையாக அறிவிப்பேன். நன்றி.' என பதிவிட்டுள்ளார்.
அப்போ நயன்தாரா வாழ்க்கை
யோகி பாபு தனது திருமணம் குறித்து பரவும் வதந்தியை தடுக்க பதிவிட்டுள்ள பதிவின் கீழ், பலரும் அப்போ நயன்தாரா வாழ்க்கை என்ன ஆகும் என காமெடியாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
உனக்கு ஏற்கனவே ஆள் இருக்கு
தலைவா உனக்கு கல்யாணம் ஆகாது தலைவா. உனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு கோலமாவு கோகிலா என, கோலமாவு கோகிலா படத்தில் வரும் எனக்கு கல்யாண வயசு தான் வந்துடுச்சு டி பாடல் ஸ்டில்லை பதிவிட்டு இந்த நெட்டிசன் கலாய்த்துள்ளார்.


Click it and Unblock the Notifications











