ஓம் முருகா.. வலைப்பேச்சு டீமுக்கு ஒரே ட்வீட் போட்டு பதிலடி கொடுத்த யோகி பாபு.. என்ன நடக்கப்போகுதோ!

சென்னை: தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும் கதையின் நாயகனாகவும் வலம் வரும் யோகி பாபு பேட்டி ஒன்றில் வலைப்பேச்சு டீமில் உள்ளவர்களை மறைமுகமாக தாக்கி பேசிய நிலையில், யோகி பாபுவை டைரக்ட் அட்டாக் செய்து விட்டது வலைப்பேச்சு டீம்.

யோகி பாபு ஒரு நல்ல நடிகரே இல்லை என்றும் அவர் ஒரு குப்பை என்றும் மேலும், படுகேவலமான வார்த்தைகளை எல்லாம் பிரயோகப்படுத்தி பேசியிருப்பது ரசிகர்களை மட்டுமின்றி சினிமாவில் உள்ள பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

yogi babu valaipechu bismi

விஜய் நடித்துள்ள தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் நடித்துள்ள யோகி பாபு அடுத்த வாரம் அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். இந்நிலையில், யோகி பாபு மற்றும் அஜித் இடையே நடந்த சம்பவத்தை யோகி பாபுவே தங்களிடம் சொன்னதாக வலைப்பேச்சு டீம் குண்டை தூக்கிப் போட்டுள்ள நிலையில், யோகி பாபு ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

யோகி பாபு vs வலைபேச்சு: நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் நெகட்டிவ் செய்திகளை சொல்லக் கூடாது என்றால் பணம் கொடுக்க வேண்டும் என சொல்கின்றனர் என யோகி பாபு மறைமுகமாக வலைபேச்சு டீமை தாக்கி பேசியிருந்தார். நேரடியாக வீடியோ வெளியிட்டு உங்களிடம் அப்படி காசு கேட்டோமா என்றும் சத்தியம் செய்ய தயாரா? என்றும் கேள்வி எழுப்பி யோகி பாபுவை கடுமையான வார்த்தைகளால் விளாசி வீடியோ ஒன்றை போட்டுள்ளனர்.

yogi babu valaipechu bismi

யோகி பாபு பதிலடி: திருத்தணி முருகன் கோயிலுக்கு குழந்தையை தூக்கிக் கொண்டு வந்து குழந்தை மீது சத்தியம் செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு வலைப்பேச்சு டீம் பேசிய நிலையில், அவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக முருக வேல் ஒன்றை தற்போது நடிகர் யோகி பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கூடிய சீக்கிரமே இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

yogi babu valaipechu bismi

அஜித் ரசிகர்கள் ஆதரவு: அஜித் மீது உள்ள வெறுப்பு காரணமாகத்தான் அஜித் டோன்ட் டச் என யோகி பாபு தொடும் போது சொன்னார் என்றும் அதை தங்களிடம் சொன்னதே யோகி பாபு தான் என்றும் வலைப்பேச்சு பிஸ்மி பேசியுள்ளார். இந்நிலையில், அந்த மூவருக்குமே அஜித் மீது காண்டு உள்ளது என்றும் அதனால் தான் இப்படி பேசுகின்றனர். நிச்சயம் தவறு உங்கள் மீது இருக்காது என்றும் அவர்களை பொருட்படுத்த வேண்டாம் என யோகி பாபுவுக்கு ஆதரவாக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X