என்னை பத்தி தவறா பேசாதீங்க.. யோகி பாபு மனவேதனை.. வருத்தம் தெரிவித்த தயாரிப்பாளர்

சென்னை: கஜானா திரைப்பட இசை வெளியீட்டு விழாவுக்கு நடிகர் யோகிபாபு வராதாதை கண்டித்து தயாரிப்பாளர் ராஜா பேசியிருந்தார். ரூ.7 லட்சம் கொடுத்திருந்தால் யோகி பாபு வந்திருப்பார். நீ நடிகனாக இருக்க தகுதியற்றவன் என ஒருமையில் பேசி திட்டியிருந்தார். இதுதொடர்பான வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், சர்ச்சையாக மாறியுள்ளது. இந்நிலையில், இதற்கு யோகி பாபு விளக்கம் கொடுத்து பதிலடி கொடுத்திருக்கிறார்.

நடிகர் யோகி பாபு, வேதிகா, இனிகோ பிரபாகர் முதன்மை வேடங்களில் நடித்துள்ள படம் கஜானா. போர் ஸ்கொயர் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தின் கதை, திரைக்கதையை எழுதி பிரபாதிஸ் சாம்ஸ் இயக்கியுள்ளார். இந்த படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் ராஜா, ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழா என்பது பிறக்கும் குழந்தையை போன்று. அந்த குழந்தையை வளர்த்து எடுக்க வேண்டிய பொறுப்பு அந்த படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் இருக்கிறது என கூறினார்.

Yogi Babu explains about producer Raja s defamatory remarks

தகுதியற்ற நடிகன்: இசை வெளியீட்டு விழாவில் யோகி பாபு கலந்துகொள்ளாததை கண்டித்து பேசிய தயாரிப்பாளர் ராஜா, இந்தக் கூட்டத்தில் யோகி பாபு இருக்கிறாரா என எல்லோரும் கேட்கிறார்கள். நான் இங்கு அவர் வரவில்லை என சொல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது. நேரில் வந்தால் தான் வந்திருக்கிறார் என பார்க்க முடியும். ஒரு படத்தின் வெளியீட்டுக்கு வரவில்லை என்றால், நீ நடிகனாக இருக்கவே தகுதியற்றவன். இதை வன்மையாக கண்டிக்கிறேன். இதற்கு காலம் கூடிய விரைவில் பதில் சொல்லும். ஒரு ரூ.7 லட்சம் கொடுக்கவில்லை என்றால் அந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிக்கு வரமாட்டார் போல. இது எவ்வளவு பெரிய கேவலமான விஷயம் என கடுமையாக பேசியிருந்தார்.

யோகி பாபு தரப்பு வாதம்: தயாரிப்பாளர் ராஜா பேசியிருப்பது சர்ச்சையான நிலையில் இதற்கு யோகி பாபு தரப்பில் விளக்கம் தரப்பட்டதாகக் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் ராஜா யார் என்றே தெரியாதாம். பல வருடங்களாக கஜானா படம் எடுக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கின்றனர். இப்போது யோகி பாபு பிஸியாக இருப்பதாகவும், அதனால் தான் பட புரோமோஷன் நிகழ்ச்சிக்கு வர முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும், யோகி பாபு பல படங்களி்ல் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தற்போது இந்த நிகழ்ச்சிக்கு வந்தால் மற்ற தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும். அடுத்தடுத்த படங்களில் நடித்து கொண்டிருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளனர்.

விளக்கம்: மேலும், அந்த ரூ.7 லட்சம் பற்றிய தகவலால் யோகி பாபு மிகவும் மன வேதனை அடைந்திருக்கிறார். இதுகுறித்து யோகி பாபு, "என்னை பற்றி பரப்பப்படும் தவறான தகவல் மன வேதனை அடைய செய்கிறது. இதுபோன்ற பொய்யான விசயங்களை பரப்பாதீர்கள். என தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து கஜானா படத்தின் தயாரிப்பாளர் பிரபதீஸ் சாம்ஸ் மன வருத்தத்துடன் தனது கருத்தை பதிவிட்டிருக்கிறார். அதாவது, நேற்று நடந்த விழாவில், தயாரிப்பாளர் ராஜாவின் கருத்திற்கும், கஜானா படத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அவர் கூறியது அவரது கருத்து என்றும் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X