சாப்பிடும் முன் சாமி கும்பிட்ட விஷால்.. பக்கத்துல உட்கார்ந்துக்கிட்டே யோகி பாபு பார்த்த வேலை!

சென்னை: இயக்குநர் ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்து வருகிறார் விஷால். எம்ஜிஆர் பிறந்தநாளை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் அவரது உருவ படத்திற்கு மாலை மரியாதை எல்லாம் செலுத்தப்பட்டு உணவு வழங்கப்பட்டது. அப்போது விஷால் உணவை உண்ணும் முன்பு வழக்கம் போல எல்லா தெய்வங்களையும் வணங்க தொடங்கினார். அருகே அமர்ந்திருந்த யோகி பாபு அதற்கு கொடுத்த ரியாக்‌ஷன் தான் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகிறது.

ஹரி இயக்கத்தில் சண்டக்கோழி படத்தில் நடித்து ஆக்‌ஷன் ஹீரோவாகவும் புரட்சி தளபதியாகவும் அதிரடி காட்டினார் விஷால். ஆனால், மீண்டும் ஹரி இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து சண்டக்கோழி 2 படத்தில் நடித்த விஷாலுக்கு அந்த படம் பெரிதாக கைகொடுக்கவில்லை. இந்நிலையில், மீண்டும் இயக்குநர் ஹரியுடன் இணைந்து ரத்னம் படத்தில் நடித்து வருகிறார்.

Yogi Babu face reaction over Vishal praying while eating at Rathnam shooting spot goes trending

சாமி ஸ்கொயரால் பயந்த சூர்யா: சியான் விக்ரமை வைத்து சாமி படத்தை எடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தவர் ஹரி. ஆனால், பல ஆண்டுகள் கழித்து சியான் விக்ரமையும் கீர்த்தி சுரேஷையும் வைத்து அவர் இயக்கிய சாமி ஸ்கொயர் திரைப்படம் பெரிய தோல்வியை சந்தித்தது. அதன் பின்னர் ஹரி இயக்கத்தில் அருவா எனும் படத்தில் நடிக்க சம்மதித்த சூர்யா சில வாரங்களிலேயே அந்த படத்தில் நடிக்கவில்லை என அறிவித்து விட்டார்.

இது ஆக்‌ஷன் மேடம்: நடிகர் விஷால் சமீபத்தில் ரத்னம் பட செட்டில் உருவாக்கப்பட்ட டாஸ்மாக்கிற்கு குடிமகன்கள் வந்து விட்டனர் என அவர்களை அடித்து திட்டி வெளியே அனுப்பிய வீடியோவை வெளியிட்டு இருந்தார். அதை பார்த்த நெட்டிசன்கள் எல்லாம் இது ஆக்‌ஷன் மேடம் என சொல்வதெல்லாம் உண்மை டெம்பிளேட்டை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

சாப்பிடும் முன்பு சாமி கும்பிட்ட விஷால்: எம்ஜிஆரின் பிறந்தநாள் நினைவாக ரத்னம் படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷால் மரியாதை செலுத்தி பின்னர் அனைவருடனும் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோ காட்சி தற்போது தீயாக பரவி வருகிறது. சமீப காலமாக சாப்பிடும் முன்பாக அனைத்து மதக் கடவுள்களையும் வணங்கிவிட்டு விஷால் உணவு உண்ணும் முறையை கையாண்டு வருகிறார்.

யோகி பாபு ரியாக்‌ஷன்: விஷால் அருகே அமர்ந்துக் கொண்டு இருந்த நகைச்சுவை நடிகர் யோகி பாபு விஷால் சாமி கும்பிடுவதை பார்த்து "ஆஹா ஆரம்பிச்சுட்டான்யா" என்பது போல கொடுத்த ஃபேஸ் ரியாக்‌ஷன் தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X