“பீஸ்ட்“ தாறுமாறா இருக்கும்… அந்த கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவிய யோகிபாபு !

சென்னை : பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள யோகிபாபுவிடம், பீஸ்ட் கூர்கா படத்தின் கதையா? என செய்தியாளர்கள் கேட்க பதில் எதுவும் சொல்லாமல் நைசாக நழுவி விட்டார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமாரின் இயக்கத்தில் வெளியாகவுள்ள இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே மற்றும் யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

ஏப்ரல் 13 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ள படத்தை, விஜய்யின் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர்

பீஸ்ட்

பீஸ்ட்

பீஸ்ட் திரைப்படத்தின் டிரைலரை ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நிலையில், டிரைலர் கடந்த வாரம் வெளியானது. இதில், செல்வராகவனின் வசனங்கள் டிரைலரில் தெறிக்கவிட்டிருக்கிறது. துப்பாக்கி சுடும் காட்சிகளும் ஜெட் விமானத்தை விஜய் இயக்கும் காட்சிகளும் டிரைலரில் மாஸாக அமைந்துள்ளது.

800க்கும் மேற்பட்ட திரையரங்கில்

800க்கும் மேற்பட்ட திரையரங்கில்

கோலமாவு கோகிலா,டாக்டர் திரைப்படங்களைப் போல இப்படத்திலும் கடத்தலை மையமாக வைக்கப்பட்டுள்ளது. பீஸ்ட் படத்தில் மாலில் பொதுமக்களை கடத்தி வைத்திருக்கும் தீவிரவாதிகளிடமிருந்து மீட்கப் போராடும் வீரராகவனாக நடிகர் விஜய் நடித்துள்ளார். பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 800க்கும் அதிகமான திரையரங்குகளில் படம் வெளியாக உள்ளது.

நைசாக நழுவிய யோகிபாபு

நைசாக நழுவிய யோகிபாபு

பீஸ்ட் திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ள யோகி பாபுவுக்கு அண்மையில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதனை அடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது பீஸ்ட் திரைப்படம் கூர்கா படத்தின் கதையா ? என கேட்டனர். எனக்கு உள்ளே வரும் போதே தெரியும் இப்படித்தான் எதையாவது கேட்பீங்க என்று புன்சிரிப்புடன் நழுவி சென்றார். அப்போதும், செய்தியாளர்கள் அவரை பின்தொடர்ந்து கேள்வி கேட்டனர்.

Recommended Video

என்னமா கார் ஓட்டறாரு..நம்ம Thalapathy Vijay | Beast | Rolls Royce | Tamil Filmibeat
பீஸ்ட் தாறுமாறான படம்

பீஸ்ட் தாறுமாறான படம்

என்னப்பா... சொல்லுங்க என்ற யோகிபாபு, தளபதியின் படம்னாலே ஹிட்டுத்தான், பீஸ்ட் தாறுமாறான படம் பாருங்க என்று மட்டும் கூறிவிட்டு அந்த இடத்தைவிட்டு நைசாக நகர்ந்தார். இயக்குநர் நெல்சன், பீஸ்ட் படம் கூர்கா படம் இல்லை என்று கூறினாலும், ரசிகர்கள் டிரைலர் கூர்கா படம் போல இருக்கு என்று கருத்துக்களை தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X