இயக்குநராக அவதாரம் எடுக்கும் காமெடி நடிகர்.. ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க!
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் உச்ச நடிகையை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
நடிகர் யோகி பாபு முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். ரஜினி உட்பட பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து விட்டார் நடிகர் யோகி பாபு.
நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி குணச்சித்திர நடிகராகவும் நடித்து வருகிறார். இந்த ஆண்டு மட்டும் 19 படங்களை கைவசம் வைத்திருக்கிறார் யோகி பாபு.

பிஸியான நடிகர்
முன்னணி ஹீரோக்களின் கால்ஷீட் கூட கிடைத்து விடுகிறது. ஆனால் யோகி பாபுவின் கால்ஷீட் கிடைப்பது குதிரை கொம்பாகிவிட்டது என காத்திருக்கின்றனர் இயக்குநர்கள். அந்த அளவுக்கு பிஸியான நடிகராகி விட்டார் யோகி பாபு.

ஜெயம் ரவி ஹின்ட்
இந்நிலையில் நடிகர் யோகி பாபு இயக்குநர் அவதாரம் எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோமாளி படம் வெளியான நேரத்தில் இதுகுறித்து ஹின்ட் கொடுத்திருந்தார் நடிகர் ஜெயம் ரவி. இந்நிலையில் இதுகுறித்த தகவல்தான் தற்போது கோலிவுட்டில் ஒரே பேச்சாக உள்ளது.

நயன்தாரா ஹீரோயின்?
அதாவது எஸ்பி சவுத்ரியின் 18 ரீல் புரொடெக்ஷன் தயாரிக்கும் படத்தை நடிகர் யோகி பாபு இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக கதை, திரைக்கதை, வசனத் என ரெடியாகி வருகிறாராட் யோகி பாபு. அதோடு இந்தப் படத்தில் டாப் நடிகையான நயன்தாராவை ஹீரோயினாக நடிக்கவும் பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது.

லாக்டவுனுக்கு பிறகு
நடிகை நயன்தாரா தற்போது மூக்குத்தி அம்மன் மற்றும் நெற்றிக்கண் ஆகிய இரண்டு படங்களில் நடித்து வருகிறார். தற்போது லாக்டவுன் அமலில் இருப்பதால், நிலைமை இயல்பு நிலைக்கு திரும்பிய பிறகு யோகி பாபுவின் படத்தில் நடிப்பது குறித்து நயன்தாரா முடிவை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காஜல் அகர்வால்
நயன்தாரா படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளாவிட்டால், நடிகை காஜல் அகர்வாலை அந்த படத்தில் நடிக்க வைக்கலாம் என்ற ஆப்ஷனையும் வைத்திருக்கிறதாம் தயாரிப்பு தரப்பு. நயன்தாராவுடன் கோலமவு கோகிலா, தர்பார் ஆகிய படங்களில் நடித்துள்ள யோகி பாபு காஜல் அகர்வாலுடன் கோமாளி படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











