தலைவருடன் என் நடிப்பு எப்படி?.. ட்விட்டரில் யோகிபாபு கேள்வி
சென்னை : தர்பார் படத்தில் தலைவருடன் நடித்தது எப்படி இருக்கிறது என்று யோகி பாபு ட்விட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக மாறி இருக்கிறார் யோகிபாபு. நேற்று வெளியான தர்பார் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருந்தார் யோகிபாபு. தர்பார் படத்தின் முதல் பாதி எந்த குறையும் இன்றி கலகலப்பாக சென்றதற்கு முக்கிய காரணம் யோகிபாபுவின் நகைச்சுவை தான் .

சமீப காலமாக ட்விட்டரில் ஆக்டிவாக இருந்து வருகிறார் யோகிபாபு. தர்பார் படத்தின் வெளியீட்டை அடுத்து ட்விட்டரில் தனது ரசிகர்களுக்கு, தர்பார் படத்தில் ரஜினியுடன் நடித்தது எப்படி இருக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதற்கு ரசிகர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக நல்ல பாசிட்டிவான பதிலையே பதிவிட்டுள்ளனர். உங்கள் நடிப்பு நன்றாக இருந்தது சூப்பர், நயன்தராவை கலாய்த்தது நன்றாக இருந்தது என்று அனைவரும் கமெண்ட்டை பதிவிட்டுள்ளனர்.

யோகிபாபு தற்போது வருடத்திற்கு குறைந்தது பதினாறு படங்களாவது நடித்து விடுகிறார். இதனை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருந்தார் . தமிழ்நாட்டின் நம்பர் 1 காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் யோகிபாபு. இருந்தும் சிறிய பட்ஜெட் படங்கள் என்றால் தனது சம்பளத்தை குறைத்து கொண்டு நடிக்கிறார் .
தற்போது யோகிபாபு அடுத்ததாக பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். அதில் சித்தார்த்தின் டக்கர் படத்தில் முதன் முதலில் இரட்டை வேடத்தில் நடிக்கிறாராம். இந்த படத்தை கப்பல் படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் ஜி கிரீஷ் இயக்குகிறார் .
யோகிபாபுவின் வளர்ச்சி பலரை ஆச்சரியபட வைத்திருக்கும் நிலையில் சமீபத்தில் சந்தானம் கூட அவரின் டகால்டி படத்தில் இதனை பற்றிய வசனம் ஒன்றை வைத்து இருந்தார். டகால்டி பட முன்னோட்டத்தில் 'நான் சத்தியமா நினைச்சு பாக்கல நீ இவ்வளவு பெரிய ஆளாவேனு என்று யோகிபாபுவை பார்த்து சந்தானம் கேட்கும் கேள்வி அவரின் வளர்ச்சியை பற்றிய கேள்வி போல் தான் இருக்கும். சந்தானத்தின் ஆரோக்கியமான கிண்டல்களை சினிமாவில் எதார்த்தமாக ஏற்று கொள்வார்கள்.
யோகிபாபு அடுத்ததாக பன்னிகுட்டி படத்தில் கருணாகரனுடன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அடுத்ததாக சசிகாந்த் தயாரிப்பில் மன்டேலா என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார். யோகிபாபு நாயகனாக நடித்த எந்த படமும் வெற்றி பெறாத நிலையில் இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்பை ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications











