காதலுக்காக விஜய் ரேஞ்சுக்கு இறங்கி வேலைப் பார்க்கும் யோகிபாபு
சென்னை: காவி ஆவி நடுவுல தேவி படத்தில் யோகிபாபு என்ன செய்கிறார் என்பது தெரிய வந்துள்ளது.
புகழ்மணி இயக்கி வரும் படம் காவி ஆவி நடுவுல தேவி. புதுமுகம் ராம் சுந்தர் ஹீரோவாக அறிமுகம் ஆகிறார். இந்த படத்தில் யோகிபாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

யோகிபாபு, ராஜேந்திரன், தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி அடிக்கும் லூட்டியில் படம் பார்க்க வரும் அனைவரும் விழுந்து விழுந்து சிரிப்பார்களாம்.
காதல் ஜோடியை சேர்த்து வைப்பவராக யோகி பாபுவும், காதலை பிரிக்கும் தாதாவாக மொட்டை ராஜேந்திரனும், மலையாள மாந்திரீகனாக இமான் அண்ணாச்சியும் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இமான் அண்ணாச்சியை மலையாள மாந்திரீகனாக பார்க்கவே சிரிப்பு சிரிப்பா வருமே. ஷாஜஹான் படத்தில் விஜய் காதலை சேர்த்து வைத்தது போன்று யோகி பாபுவும் சேர்த்து வைப்பாரோ?
காவி ஆவி நடுவுல தேவி படத்தை ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











