'தளபதி 63' படத்தில் நடிக்க பெரிய தொகை கேட்கும் யோகிபாபு: எவ்வளவு தெரியுமா?
Recommended Video

சென்னை: நகைச்சுவை நடிகர் யோகிபாபுவின் சம்பளம் குறித்து தெரிய வந்துள்ளது.
கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை சுற்றி சுற்றி வந்து காதலித்து ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றார் யோகிபாபு. அவரின் அசத்தலான நடிப்பை பார்த்து நயன்தாராவே இம்பிரஸ் ஆகி தனது அடுத்த படத்தில் அவரை நடிக்க வைக்க பரிந்துரை செய்தார்.
யோகிபாபுவின் மார்க்கெட் தற்போது உச்சத்தில் உள்ளது.

சந்தானம்
வடிவேலு பிரச்சனைகளில் சிக்கி நடிக்க முடியாமல் இருந்தார். நகைச்சுவையில் கலக்கிய சந்தானமோ நான் நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்கிறார். இதனால் பரோட்டா சூரி, யோகிபாபு ஆகியோரின் காட்டில் அடை மழையாகத் தான் உள்ளது. யோகிபாபுவின் கையில் தற்போது 19 படங்கள் உள்ளன.

யோகிபாபு
நகைச்சுவை நடிகர்கள் உச்சத்தை தொட்டவுடன் ஹீரோவாக நடிப்பது வழக்கமாகிவிட்டது. அதற்கு யோகிபாபு ஒன்றும் விலக்கு அல்ல. அவர் தர்மபிரபு என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். அந்த படத்தில் நடித்த பிறகு இனிமேல் நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அவர் அடம் பிடிக்காமல் இருந்தால் சரி.

லட்சங்கள்
ஒரு படத்தில் நடிக்க நாள் ஒன்றுக்கு ரூ. 2 லட்சம் சம்பளம் வாங்கி வந்தார் யோகிபாபு. அந்த தொகையை அண்மையில் ரூ. 3 லட்சமாக உயர்த்திவிட்டார். ஒரு படத்திற்கு 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் நாள் ஒன்றுக்கு ரூ. 3 லட்சம் விதம் 20 நாட்களுக்கு ரூ. 60 லட்சம் வாங்குகிறார். இந்நிலையில் அவர் தளபதி 63 படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் கேட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

தளபதி 63
சர்கார் படத்தை அடுத்து அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் யோகிபாபு. அந்த படத்தில் நடிக்க யோகிபாபு ரூ. 80 லட்சம் சம்பளம் கேட்டுள்ளாராம். சர்கார் படத்தில் விஜய்யின் ஓட்டை கள்ள ஓட்டாக போட்டு பிரச்சனையை கிளப்பியவர் அவர் தான். தளபதி 63 படத்தில் எந்த பிரச்சனையை கிளப்பிவிடப் போகிறாரோ?


Click it and Unblock the Notifications











