twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சம்பள விஷயத்தில் சந்தானம் ரூட்டை பிடித்த யோகிபாபு: பார்த்து அப்படியே...

    By Siva
    |

    Recommended Video

    Actor Yogi Babu: காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள முடிவு செய்துவிட்டார் யோகி பாபு- வீடியோ

    சென்னை: காற்றுள்ள போதே தூற்றிக்கொள்ள முடிவு செய்துவிட்டார் யோகி பாபு.

    சில பல பிரச்சனைகளில் சிக்கியுள்ளதால் வடிவேலு படங்களில் நடிக்காமல் உள்ளார். சந்தானமோ நடித்தால் இனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார்.

    அந்த இருவரும் காமெடி செய்வதை நிறுத்தியதால் யோகிபாபுவுக்கு தான் அடித்தது ஜாக்பாட்.

    யோகிபாபு

    யோகிபாபு

    கோலிவுட்டில் செம பிசியான நகைச்சுவை நடிகராக உள்ளார் யோகிபாபு. அவரைத் தேடி ஹீரோ வாய்ப்புகளும் வருகின்றன. ஆனால் ஹீரோ வாய்ப்பு வருவதால் இனி காமெடி பண்ண மாட்டேன் என்று அவர் இதுவரை சொல்லவில்லை.

    வாய்ப்பு

    வாய்ப்பு

    பட வாய்ப்புகள் வந்து குவிவதை பார்த்த யோகிபாபு சம்பள விஷயத்தில் ரூட்டை மாற்றிவிட்டார். ஒரு படத்திற்கு இவ்வளவு சம்பளம் என்று வாங்கிய அவர் தற்போது நாள் ஒன்றுக்கு ரூ. 5 லட்சம் கேட்கிறாராம். முன்பு சந்தானம் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்தபோது நாள் கணக்கில் தான் சம்பளம் வாங்கினார். அவர் ரூட்டில் செல்கிறார் போன்று.

    நயன்தாரா

    நயன்தாரா

    தற்போது தர்பார் படத்தில் நடித்து வரும் யோகிபாபுவுக்கு நயன்தாரா பரிந்துரை செய்கிறாராம். கோலமாவு கோகிலா படத்தில் யோகிபாபு நயன்தாராவை சுற்றி சுற்றி வந்து காதலித்தது ரசிக்கும்படியாக அமைந்தது. அதில் இருந்து நயன்தாரா யோகிபாபுவை பரிந்துரை செய்து வருகிறாராம்.

    தயாரிப்பாளர்கள்

    தயாரிப்பாளர்கள்

    யோகிபாபு என்ன பெரிதாக நடிக்கிறார். எல்லாப் படத்திலும் ஒரே மாதிரியாகத் தான் நடிக்கிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இருப்பினும் அவரை தங்களின் படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் போட்டா போட்டி போடுகிறார்கள். யோகிபாபு தனது சம்பளத்தை உயர்த்தியது அவர்களுக்கு ஒரு பிரச்சனையாகவே இல்லை.

    சந்தானம்

    சந்தானம்

    தங்களின் படங்களில் சந்தானம் காமெடி செய்தால் நன்றாக இருக்குமே என்று இன்னும் சில முன்னணி ஹீரோக்கள் கருதுகிறார்கள். அவர்கள் சந்தானத்தை ரொம்பவே மிஸ் பண்ணுகிறார்கள். சந்தானம் மட்டும் மீண்டும் காமெடி பண்ண வந்தால் அவர் லெவலே வேறு.

    English summary
    Yogi Babu is following Santhanam's path in salary issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X