தர்பாரில் யோகிபாபு: பாவம் ரஜினிக்கு என்ன பிரச்சனை வரப் போகிறதோ?
Recommended Video

சென்னை: தர்பார் படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நேற்று துவங்கியது. தேர்தலில் வாக்களிக்க மட்டும் ரஜினி சென்னைக்கு வந்துவிட்டு செல்வாராம்.

இந்நிலையில் படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தர்பார் படத்திற்காக யோகி பாபு 40 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது கோலிவுட்டின் பிசியான காமெடியன் யோகி பாபு தான். சர்கார் படத்தில் கள்ள ஓட்டு போட்டு விஜய்க்கு பிரச்சனை செய்தது போன்று தர்பாரில் என்ன வில்லங்கம் பண்ணப் போகிறாரோ?
தர்பார் படத்தில் நயன்தாரா நடிக்கிறார் ஆனால் அவர் ரஜினிக்கு ஜோடி கிடையாது என்று கூறப்படுகிறது. நயன்தாரா ரஜினிக்கு ஜோடியா, வில்லியா, இல்லையா என்பதை முருகதாஸ் அறிவிக்கும் வரை காத்திருப்போம்.
யோகி பாபு ரஜினியுடன் சேர்ந்து காமெடி செய்து நம்மை நிச்சயம் சிரிக்க வைப்பார் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications











