Yogi Babu - யோகிபாபுவுக்கு அடித்த அடுத்த யோகம்.. தெலுங்கில் என்ட்ரி?.. சம்பளத்தை உயர்த்திட்டாராம்

சென்னை: Yogi Babu (யோகிபாபு) நடிகர் யோகிபாபு தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

கோலிவுட்டின் தவிர்க்க முடியாத காமெடி நடிகராக உருவெடுத்து இருக்கிறார் யோகிபாபு. லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகம் ஆகி பின்னர் வெள்ளி திரைக்கு வந்தவர். வெள்ளித்திரைக்கு வந்த புதிதில் அவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் இல்லை. ஒரு வழியாக யாமிருக்க பயமேன் படத்தில் அவர் ஏற்றிருந்த கதாபாத்திரம் பலராலும் ரசிக்கப்பட்டது. அதே சமயம் அந்தப் படத்தில் யோகிபாபுவை அளவுக்கு அதிகமாகவே உருவகேலி செய்துவிட்டார்கள் என்ற விமர்சனமும் எழுந்தது

Yogi Babu Increased His Salary For Telugu Film Entry

தொடர் வாய்ப்புகள்: அந்தப் படத்திற்குப் பிறகு யோகிபாபுவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அதனை சரியாக பயன்படுத்திக்கொண்டவர் தனது டைமிங் காமெடிகளாலும் கவுண்ட்டர்களாலும் ரசிகர்களை வெகுவாகவே சிரிக்க வைத்தார். ஒரு கட்டத்தில் வடிவேலு ஒதுங்க, விவேக் இறந்து போக, சந்தானம் ஹீரோவாக மாற என காமெடிக்கென வெற்றிடம் உருவானது. அதனை யோகிபாபு நிரப்பினார்.

ஹீரோ: காமெடியன்கள் ஹீரோவாகும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பெருகிவருகிறது. அதற்கு ஏற்றார் போல் நடிகர் யோகிபாபுவும் நெல்சன் திலீப்குமார் இயக்கிய கோலமாவு கோகிலா திரைப்படத்தில் லீடு ரோலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கிய மண்டேலா படத்திலும் ஹீரோவாக நடித்தார். இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மாவீரன், ஜெயிலர்: அதனை தொடர்ந்து அவர் நடித்த கூர்கா உள்ளிட்ட படங்கள் போதிய வரவேற்பைப் பெறவில்லை. ஹீரோவாக நடித்தாலும் காமெடி ரோலிலும் தொடர்ந்து நடித்துவருகிறார். அந்த வகையில் கடைசியாக அவர் மாவீரன் மற்றும் ஜெயிலர் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

சூப்பர் பாபு: மாவீரன் படத்தில் யோகிபாபுவின் டைமிங்கும் கவுண்ட்டர்களும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தன. இப்படிப்பட்ட யோகிபாபுவை பார்த்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்றும் ரசிகர்கள் கொண்டாடினர். அதேபோல் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியுடனான காம்போவும் யோகிபாபுவுக்கு வொர்க் அவுட் ஆனது. நெல்சனின் டார்க் காமெடிக்கும் யோகி பாபு பக்காவாக செட்டானார்.

சம்பளம் உயர்வு: தொடர்ந்து பல படங்களில் நடித்துவரும் யோகி அயலான் படத்திலும் நடித்திருக்கிறார். அந்தப் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. இப்படி தமிழ், ஹிந்தி என கலக்கி வரும் யோகிபாபு தற்போது தெலுங்கிலும் என்ட்ரி ஆகவிருக்கிறாராம். பிரபாஸ் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில்தான் யோகிபாபு கமிட்டாகியிருக்கிறார் என்றும். அதற்காக தனது சம்பளத்தை தமிழில் வாங்குவதைவிடவும் மூன்று மடங்கு உயர்த்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது அவர் டோலிவுட்டிலும் களமிறங்குவதாக வெளியான தகவலை அடுத்து கண்டிப்பாக யோகி தெலுங்கிலும் தனக்கென தனி மார்க்கெட்டை பிடிப்பார் என்று ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X