Just In
- 1 hr ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 2 hrs ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 2 hrs ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 2 hrs ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- Automobiles
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- News
மோசமடையும் உடல்நிலை... லாலு பிரசாத் யாதவை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்ற திட்டம்
- Lifestyle
இந்த கீரை ஆண்களின் ஆண்மை குறைபாட்டை போக்கி பாலுணர்ச்சியை அதிகரிக்குமாம்.. தெரியுமா?
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Sports
அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
யோகிபாபு பயங்கர கஷ்டத்தில் உள்ளார்: ரசிகர்களை அதிர வைத்த மயில்சாமி
சென்னை: நகைச்சுவை நடிகர் யோகிபாபுவுக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பது ரசிகர்களுக்கு தெரியாமல் போய்விட்டதே.
சாம் ஆண்டன் இயக்கத்தில் யோகிபாபு பாதுகாவலராக நடித்துள்ள படம் கூர்கா. படத்தின் ஹீரோவே அவர் தான். இந்த படத்தில் ஆனந்த்ராஜ், லிவிங்ஸ்டன், பிரதீப் ராவத் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கூர்கா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டார். படத்திற்கு ராஜ் ஆர்யன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கூர்கா படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.
நடிகர் விக்ராந்தை பார்க்க திருமண வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்த மணப்பெண்
யோகிபாபு குட்டையாக, குண்டாக இருப்பதும், அவரின் பரட்டை தலையையும் பலர் கிண்டல் செய்கிறார்கள். கிண்டல் செய்பவர்கள் கண் முன்பே அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறார் அவர். உருவத்தில் என்ன உள்ளது, திறமை இருந்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை யோகிபாபு நிரூபித்துவிட்டார்.

இவன்லாம் காமெடியனாக நடிக்க வந்துட்டான் என்று கிண்டல் செய்தவர்களுக்கு முன்பு ஹீரோவாக நடித்துக்காட்டிவிட்டார் யோகிபாபு. இந்நிலையில் கூர்கா இசை வெளியீட்டு விழாவில் பேசிய நகைச்சுவை நடிகர் மயில்சாமி யோகிபாபுவின் கஷ்டம், பிரச்சனையை பற்றி பேசினார்.
யோகிபாபு மற்றும் இயக்குநர் பற்றி மயில்சாமி கூறியதாவது,
சாம் ஆண்டன் யாரிடமும் உதவியாளராக வேலை செய்யாமல் நேராக இந்த படத்தை இயக்கியுள்ளார். ஆனால் அவர் வேலை செய்யும் விதம் 20 படங்களில் உதவியாளராக வேலை செய்தவர் போன்று உள்ளது. இந்த படத்தில் வேலை செய்த அனைவரும் அற்புதமான திறமைசாலிகள் தான்.
இந்த மேடையில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. யோகிபாபு எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பது அவரை தவிர வேறு யாருக்குமே தெரியாது. அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்று என்னிடம் சொல்லியிருக்கிறார், நானும் பார்த்திருக்கிறேன். ஆனால் இப்பவும் அவர் கஷ்டம் தான் படுகிறார். அன்று வேலையில்லாமல் கஷ்டப்பட்டார். தற்போது நிறைய இடங்களுக்கு போய் தூங்க முடியாமல், சாப்பிட முடியாமல், விடிய விடிய நடிக்கிறார். அதுவும் கஷ்டம் தானே.
ஒரு நாளைக்கு 4 அல்லது 3 மணிநேரம் மட்டுமே தூங்குவது பயங்கர கஷ்டம். அளவான சாப்பாடும், அளவான தூக்கமும் இருந்தால் உடல்நலம் நன்றாக இருக்கும். கஷ்டப்பட்டாலும் அனைவரிடமும் யோகிபாபு நல்ல பெயர் வாங்கியுள்ளார். அவர் யாரிடமும் கெட்ட பெயர் வாங்கவில்லை. அதுவே அவருக்கு மிகப் பெரிய ஆசிர்வாதம்.
தமிழகத்தில் நடந்த சீரியஸான மற்றும் நகைச்சுவை விஷயங்களை ரசிகர்கள் ரசிக்கும் வகையில் இந்த படத்தில் காட்டியுள்ளார்கள். இது முழுக்க முழுக்க ஒரு நகைச்சுவை படம் தான். இதில் யார் மனதையும் புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருக்காது. அப்படியே இருந்து அவர்கள் நினைத்தால் அது அவர்களின் தப்பு. நான் நடிக்கும்போது , எப்படி சார் இந்த சீன்லாம் எழுதுகிறீர்கள் என்று இயக்குநரிடம் கேட்டேன். அதற்கு அவர் இது நிஜத்தில் நடந்துள்ளது. ஆனால் அதை மக்கள் சீரியஸாக தான் பார்த்திருக்கிறார்கள். இதை நாம் நகைச்சுவையாக சொல்கிறோம் என்றார். எதையும் மறைக்காமல் அற்புதமான விஷயங்களை இயக்குநர் தெரிவித்துள்ளார் என்றார்.