பாலிவுட்டிற்கு போகும் யோகிபாபு... அமீர் கான் விஜய் சேதுபதியுடன் இணைந்து மாஸ் காட்டுகிறார்

சென்னை: அமீர் கானுடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் லால் சிங் சாத்தா திரைப்படத்தில் புதிதாக காமெடி நடிகர் யோகி பாபுவும் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாக யோகி பாபுவும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி அமீர் கானின் நண்பராக நடிக்கிறார். ஹாலிவுட் திரைப்படத்தில் மைக்கேல் வில்லியம்சன் என்ற கதாபாத்திரம் ஒரு தமிழ் நபர் என்பது போல் படத்தின் திரைக்கதையை சித்தரித்துள்ளனர்.

ராபர்ட் ஜெமெக்கிஸ் இயக்கத்தில் ஹாலிவுட்டில் 1994ஆம் ஆண்டு வெளியான "ஃபாரஸ்ட் கேம்ப் என்ற திரைப்படம் பல அகாடமி விருதுகளை தட்டி சென்றது. இப்படத்தில் டாம் ஹாங்க்ஸ், மைக்கேலி வில்லியம்சன், சாலி பீல்ட், கேரி சினிஸ், ராபின் ரைட் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக் அதிகாரபூர்வமாக ஹிந்தியில் லால் சிங் சாத்தா என்ற பெயரில் உருவாக உள்ளது.

Yogi Babu Joined with Aamir Khan in Lal Singh Chaddha Movie

இந்த ஹிந்தி ரீமேக்கில் முக்கிய கதாபாத்திரத்தில் அமீர் கான் நடிக்கிறார். இந்த படத்திற்கான அறிவிப்பை அமீர் கான் சென்ற மாதம் மெல்போர்னின் இந்திய திரைப்பட விழாவின் போது அறிவித்தார். ஏற்கனவே அறிவித்தபடி தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி இப்படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார்.

இப்படத்தில் விஜய் சேதுபதி அமீர் கானின் நண்பராக நடிக்கிறார். ஹாலிவுட் திரைப்படத்தில் மைக்கேல் வில்லியம்சன் என்ற கதாபாத்திரம் ஒரு தமிழ் நபர் என்பது போல் படத்தின் திரைக்கதையை சித்தரித்துள்ளனர். எனவே அந்த கதாபாத்திரம் விஜய் சேதுபதியாக இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது.

மேலும் தமிழ் சினிமாவில், தற்போது தயாராகி வரும் 80 சதவிகித திரைப்படங்களிலும் நட்சத்திர நகைச்சுவை நடிகராக இருக்கும் யோகி பாபுவும் இப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். இதற்கான பேச்சுவார்த்தைகளை தயாரிப்பாளர்கள் நடத்தி வருகின்றனர்.

அண்மையில் நடைபெற்ற ஒரு நேர்காணலின் போது யோகி பாபுவிடம் மற்ற மொழிகளில் நடிப்பது குறித்து கேள்வி கேட்ட போது அமீர் கானுடன் ஒரு படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமீர் கானின் படத்தில் ஒரு பகுதியாக நடித்தாலும் மகிழ்ச்சியே. ஆனால் தேதிகளை சரியாக நிர்வகிக்க முடியுமா என்பதற்காக தேதிகளை வகுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இது அனைத்தும் ஒத்து போனால் நம் தமிழ் சினிமாவின் தங்கங்கள் தமிழ் ரசிகர்களை இன்பத்தில் ஆழ்த்தியது போல் பாலிவுட்டையும் கலக்கி விட்டு வருவார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X