பிரபல இயக்குநருடன் முதல் முறையாக இணையும் யோகி பாபு... யார்கூடன்னு பாருங்க!
சென்னை: முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபு பிரபல இயக்குநரின் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
தமிழ் சினிமாவில் டாப் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் யோகி பாபு. முன்னணி நடிகர்கள் பலரின் படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அவரது நடிப்பில் டாக்டர் மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. மேலும் விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி, அஜித்தின் வலிமை, சிவகார்த்திகேயனின் அயலான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் யோகி பாபு.

முதல் முறையாக செல்வராகவனின் படத்தில்
இந்நிலையில் நடிகர் யோகி பாபு முதல் முறையாக இயக்குநர் செல்வராகவனின் படத்தில் இணைந்துள்ளார். அதாவது செல்வராகவன் தனது சகோதரரும் நடிகருமான தனுஷை வைத்து இயக்கும் நானே வருவேன் படத்தில் ஆன் போர்டு ஆகியுள்ளார் நடிகர் யோகி பாபு.

அதன்பிறகு இணைந்து பணியாற்றவில்லை
தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான செல்வராகவன், நடிகர் தனுஷை வைத்து காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இந்த படங்கள் ஹிட்டாயின. அதன்பிறகு இருவரும் வேறு படங்களில் இணைந்து பணியாற்றவில்லை.

யுவன் சங்கர் ராஜா இசை
இந்நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் செல்வராகவன், நடிகர் தனுஷை வைத்து நானே வருவேன் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக இந்துஜா நடிக்கிறார்.

முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு
இந்நிலையில், 'நானே வருவேன்' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நகைச்சுவை நடிகர் யோகிபாபு ஒப்பந்தமாகி உள்ளார். ஏற்கனவே தனுஷுடன் கர்ணன் படத்தில் இணைந்து பணியாற்றியுள்ள யோகிபாபு முதல் முறையாக இயக்குநர் செல்வராகவனுடன் கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











