twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காவி ஆவி நடுவுல தேவி.. கவர்ச்சி நடிகைகளுடன் குத்தாட்டம்.. யோகி பாபு கலக்கல்!

    |

    சென்னை : காவி ஆவி நடுவுல தேவி என்ற படத்தில் கவர்ச்சி நடிகையுடன் குத்தாட்டம் போட்டார் யோகி பாபு.

    காவி ஆவி நடுவுல தேவி என்ற படத்தை மனோன்ஸ் சினி கம்பைன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தில் "யோகி பாபுவுக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிக்கும் நான்கு பேர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர். அது மட்டுமல்லாமல் புதுமுக கவர்ச்சி நடிகைகளுடன் " இந்திரன் கெட்டதும் பிகராலே சந்திரன் கெட்டதும் பிகராலே மந்திரி கெட்டதும் பிகராலே" என்ற குத்து பாட்டுக்கு தாறுமாறாக குத்தாட்டமும் போட்டிருக்கிறார்.

    Yogi babu latest movie and upcoming film

    இந்த திரைப்படத்தில் வரும் பிகரா சுகரா என்ற கேள்விக்கான விடையில் யோகி பாபுவும், தம்பி ராமையாவும் போட்டா போட்டி போட்டு நடித்துள்ளனர். இந்த அருமையான காட்சி படமாக்கப்பட்ட போதே படக்குழுவினர் அனைவரும் வயிறு வலிக்க சிரித்தனர்.

    இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் அனைத்தும் முடிந்து, மேற்பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில், புதுமுகம் ராம் சுந்தர், பிரியங்கா, தம்பி ராமையா, நான் கடவுள் ராஜந்திரன், இமான் அண்ணாச்சி, வேல் சிவா, டக்ளாராமு, சிவசங்கர், ரிஷா, சிவராஜ் என முக்கிய நடிகர்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    Yogi babu latest movie and upcoming film

    வி.சி.குகநாதன் கதைக்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். கிருதியா, ஜீவன் மயில் இருவரும் பாடல் புனைய, சிவசங்கரும், சிவராக் சங்கரும் நடன பயிற்சியளிக்க , சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சியையும், ஜே. துரை மேற்பார்வையையும், செல்வம்- சரவணன் இருவரும் தயாரிப்பு நிர்வாகத்தையும் கவனித்துள்ளனர்.

    Yogi babu latest movie and upcoming film

    திரைக்கதை, வசனம், டைரக்சனை புகழ்மணி கவனித்துள்ளார். பின்னணி இசைசேர்ப்பு முடிவடைந்து விரைவில் திரைக்கு வர ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறது "காவி ஆவி நடுவுல தேவி" திரைப்படம்.

    English summary
    Yogi babu latest movie and upcoming film
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X