தல, தளபதியையே கலாய்த்த யோகி பாபு: கெத்து தான்

By Siva

சென்னை: யோகி பாபு அஜித் மற்றும் விஜய்யை கலாய்த்துள்ளார்.

என்ன தைரியம் இருந்தால் இந்த யோகி பாபு எங்க தல, தளபதியை கலாய்க்கலாம் என்று மல்லுக்குப் பாய வேண்டாம். அவர் படத்தில் தான் அவர்களை கலாய்த்துள்ளார்.

அதுவும் காசு வாங்கிக் கொண்டு சம்பந்தப்பட்டவர்களை வைத்துக் கொண்டு தான் கிண்டல் செய்துள்ளார்.

விஜய்

விஜய்

சர்கார் படத்தில் விஜய் சாரை நான் கலாய்க்கும் காட்சிகள் இருந்தன. நான் அவரை கலாய்த்து என்ன வசனம் பேசினாலும் அவர் சீரியஸாகாமல் சிரித்துக் கொண்டே இருப்பார். சொல்லப் போனால் நான் கலாய்த்ததை விஜய் சார் ரசித்தார் என்று யோகிபாபு தெரிவித்துள்ளார். சர்காரில் விஜய் தமிழ்நாட்டில் தங்கவே இந்த யோகிபாபு தானே காரணம்.

அஜித்

அஜித்

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலீஸாகிறது. அந்த படத்தில் நடித்துள்ள யோகிபாபு அஜித்தை கலாய்த்துள்ளார். அண்ணா, உங்களை கலாய்க்கும் காட்சி உள்ளது கிண்டல் செய்யட்டா என்று யோகிபாபு அஜித்திடம் கேட்க அவரோ, இது உங்களின் வேலை, தைரியமாக வசனத்தை பேசுங்க என்று தெரிவித்துள்ளார்.

காமெடியன்

காமெடியன்

தற்போது கோலிவுட்டின் காஸ்ட்லி காமெடியன் ஆகயுள்ளார் யோகிபாபு. அவருக்கு அஜித் என்றாலும், விஜய் என்றாலும் ஒன்று தானாம். இதை நாங்கள் சொல்லவில்லை, அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். விஸ்வாசம் படத்தில் அஜித்துக்கு என்ன பிரச்சனை செய்து வைத்திருக்கிறாரோ, தெரியவில்லையே.

ஜாம்பி

ஜாம்பி

யோகி பாபு நடித்து வரும் ஜாம்பி படத்தில் பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தில் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோலிவுட்டின் காஸ்ட்லி மட்டும் அல்ல பிசியான நகைச்சுவை நடிகரும் யோகி பாபு தான் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X