நயன்தாரா இல்லன்னா... பிரபல நடிகைக்கு தாலி கட்டும் யோகிபாபு.. வைரலாகும் திருமணப் போட்டோ!

நடிகை மனீஷா யாதவ்வுக்கு காமெடி நடிகர் தாலி கட்டுவது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது.

சென்னை: நடிகை மனீஷா யாதவ்வுக்கு காமெடி நடிகர் தாலி கட்டுவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகிபாபு. அவரது சுருட்டை முடிக்கும், காமெடி டயலாக்கிற்கும் ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

இதனால் சமீபகாலப் படங்களில் அவரது கதாபாத்திரத்திற்கு இயக்குநர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

கோலமாவு கோகிலா:

கோலமாவு கோகிலா:

அந்தவகையில் கோலமாவு கோகிலா படத்தில் நயன்தாராவை ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் யோகி பாபு. இப்படத்தில் இவரும், நயனும் சேர்ந்து வரும் ‘எனக்கு கல்யாண வயசுதான் வந்துருச்சுடி' பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டடித்தது.

கதையில் நாயகன்:

கதையில் நாயகன்:

இப்பட வெற்றியைத் தொடர்ந்து அவர் ஹீரோவாக நடிப்பதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதனை அவர் மறுத்தார். ஆனபோதும், பிரபல தயாரிப்பாளர் ஆர்.கே.சுரேஷ் இயக்கத்தில் அவர் கதையில் நாயகனாக நடிக்க இருக்கிறார்.

வைரல்:

வைரல்:

இந்நிலையில், தற்போது யோகி பாபுவின் திருமண புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இதில் பிரபல நடிகையான மனீஷா யாதவ்விற்கு அவர் தாலி கட்டுவது போல் உள்ளது. அப்படம் அவர் நடித்து வரும் சண்டிமுனியில் வரும் ஒரு காட்சி எனத் தெரிகிறது.

ஒருதலைக் காதல்:

ஒருதலைக் காதல்:

இப்படத்தின் ஹீரோ நட்டி எனக் கூறப்படுகிறது. ஆனால், நாயகி மனீஷாவுக்கு யோகி பாபு தாலி கட்டுவது போன்ற ஸ்டில் வெளியாகியுள்ளது. இதனால் கோலமாவு கோகிலா போல் இப்படத்தில் மனீஷாவை அவர் ஒருதலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் போலும். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X