Just In
- 7 min ago
பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரிக்கு வாழ்த்து சொன்ன சினிமா பிரபலங்கள்.. பதிலுக்கு நன்றி சொன்ன ஆரி!
- 56 min ago
மீண்டும் இணைந்த கவின் லாஸ்லியா.. பிக்பாஸ் சக்சஸ் பார்ட்டியில் சந்திப்பு.. தீயாய் பரவும் போட்டோஸ்!
- 1 hr ago
இந்த ஆண்டு வெளியாகும் பெரிய தென்னிந்திய திரைப்படங்கள்.. ரசிகர்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு!
- 2 hrs ago
காமக் கதைகள்.. அமலா பால், ஸ்ருதிஹாசன் நடிப்பில்.. நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸ் டீசர்!
Don't Miss!
- Automobiles
சுற்றுலா பயணிகளை அலற வைத்த புலி... என்ன செய்தது என தெரிந்தால் ஷாக் ஆயிருவீங்க... திக்... திக்... வீடியோ
- Finance
தங்கம், ரியல் எஸ்டேட் முதலீடுகள்.. நீங்கள் எவ்வளவு வரி செலுத்துகிறீர்கள் தெரியுமா?
- News
மணமாலையும் மஞ்சளும் சூடி.. கடைசி நாளில் டிரம்ப் மகள் நிச்சயதார்த்தம்!
- Sports
ஏமாற்றம்.. தோனியை சீண்டிய அந்த விமர்சனம்.. சிஎஸ்கேவில் இருந்து நீக்கப்பட்டார் ஹர்பஜன்.. என்னாச்சு?
- Lifestyle
உங்க ராசிப்படி உங்ககிட்ட இருக்கும் அற்புதமான ரகசிய குணம் என்ன தெரியுமா? தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க...!
- Education
CMRL Recruitment 2021: ரூ.90 ஆயிரம் ஊதியத்தில் சென்னை மெட்ரோவில் வேலை வேண்டுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இது புதுவகை லவ்வு.. ரோல்மாடல் ஆகும் "யோகி - தாரா".. கோடம்பாக்கத்தின் தாறுமாறான சென்டிமெண்ட்!
சென்னை : 'பன்னி மூஞ்சி வாயன்! புதர் மண்டையன்!' என்று தன்னைத் தானே கிண்டலடித்துக் கொண்டே கோலிவுட்டின் உச்சம் தொட்டுக் கொண்டிருக்கிறார் யோகிபாபு.
வேறெந்த காமெடியனும் செய்ய தயங்கும் இந்த செல்ஃப் காமெடி டிரிக்கை கையிலெடுத்த நேரம் அம்மாம் பெரிய நயன் தாராவுக்கே தாராளமா, ஏராளமா பிடிச்சுப் போச்சு யோகிபாபுவை.
அதனால்தான் கதையின் நாயகியாக தான் நடித்த 'கோலமாவு கோகிலா' படத்தில், தன்னை ஒரு தலையாய் காதலித்து, டூயட் பாடுமளவுக்கு யோகிபாபுவுக்கு ஸ்கோப் கொடுத்தார். அந்தப் படமும் பிய்ச்சுக்கிட்டு போயிடுச்சு.

யோகிபாபு பார்ரா
'கோ.கோ'வுக்குப் பிறகு நயன், கதையின் நாயகியாக நடித்த டோரா மற்றும் ஐரா இரண்டுமே ஓடவில்லை. இதனால் தன் படத்தில் யோகிபாபு பிரதானமாக இருக்க வேண்டுமென விரும்புகிறாராம் இப்போது.

தாரா சப்போர்ட்
தர்பார், பிகில் என மாஸ் ஹீரோக்களின் ஹீரோயின்களாக நடிக்கும் நயன், அந்தப் படங்களில் யோகிக்கு ஃபுல் சப்போர்ட் பண்ணி வாய்ப்பு வாங்கிக் கொடுத்துள்ளார். அதேபோல் நயனின் இந்த ஃபார்மூலாவை இப்போது அஞ்சலியும் பின்பற்ற துவங்கியுள்ளார்.

அஞ்சலிக்கும் புடுச்சுப் போச்சாம்
அஞ்சலி கதையின் நாயகியாக நடிக்கும் படமொன்றில் யோகி தன்னை ஒரு தலையாக காதலிப்பது போன்ற கதையம்சத்துக்கு டபுள் ஓ.கே. சொல்லியுள்ளார். எல்லாம் கோலமாவு கோகிலா படத்தில் நயன் - யோகி லவ் ஹிட்டடித்த சென்டிமெண்ட்தான். அஞ்சலியின் அடுத்தடுத்த படங்களில் யோகி இருப்பர் என்பது தெரிகிறது.

பாத்தியாடா புதர் மண்டையா
ஆக இப்படி நடிகைகள் சென்டிமெண்ட் பார்த்து தன்னை ரெக்கமெண்ட் பண்ணுவது, தான் அவர்களை ஒன் சைடாக லவ்விட சம்மதிப்பதும் யோகியை கன்னாபின்னாவென சந்தோஷப்படுத்தியுள்ளது. 'இந்த பன்னி மூஞ்சி வாயனுக்கு அடிச்ச லக்கை பார்த்தியாடா புதர் மண்டையா?' என்று இப்போதும் தன்னைத்தானே கிண்டல் செய்து கொள்கிறார்.
ஆமா, ஆக்சுவல்லி, யோகிபாபு காமெடியனா.. இல்லை ஹீரோவா.. பதர் மண்டையர்கள் யோசிச்சு சரியான பதிலைத் தரவும்.. அதுவரை காத்திருக்கிறோம்!!
- ஜி.தாமிரா