இயக்குநருக்கு நன்றிக்கடன் செலுத்திய யோகிபாபு!

By Shankar

Recommended Video

சொக்க தங்கம் யோகி பாபு!- வீடியோ

தற்போதுள்ள காமெடி நடிகர்களில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் யோகிபாபு. அவர் இல்லாத படங்களே இல்லை என்கிற அளவுக்கு ஹீரோக்கள், புதுமுகங்கள் என எதையும் கணக்குப் பார்க்காமல் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார்.

ஆனாலும் முதல் படத்தில் அறிமுகமாகும்போது எப்படி இருந்தாரோ அதேபோல்தான் இப்பவும் இருக்கிறார். அதுதான் அவரின் இந்த வளர்ச்சிக்கும் காரணம்.

Yogi Babu pays his thanks to Subramanya Siva

தற்போது விஜய் படம் தொடங்கி ஏகப்பட்ட படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். ஒரு நாள்கூட ஓய்வு இல்லை என்கிற அளவுக்கு செம பிஸி. அடுத்து அஜித்தின் 'விஸ்வாசம்' படத்திற்கு மொத்தமாக டேட் கொடுத்திருக்கிறார். அதற்குள் இருக்கிற படங்களை முடித்துக் கொடுக்க வேண்டிய நிர்பந்தம். அதற்காக இரவு பகல் பார்க்காமல் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இதற்கு நடுவே சுப்ரமண்ய சிவா இயக்கும் 'வெள்ளை யானை' படத்திற்கு ஒரு நான்கு நாள் தேவை. சிவா தரப்பிலிருந்து யோகிபாபுக்கு தகவல் போயிருக்கிறது. சம்பளம் பற்றி ஒரு வார்த்தை கூடப் பேசாமல் வந்து நடித்துக்கொடுத்திருக்கிறார்.

'யோகிபாபு' என்ற நடிகரை அறிமுகப்படுத்தியவர் சுப்ரமண்யசிவாதான். அதை மறக்காமல் இருக்கிறார் யோகிபாபு என்பதுதான் ஆச்சர்யம்.

வேறே லெவலுக்கு வருவீங்க பாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X