‘பேட்ட’ தான் மிஸ் ஆகிடுச்சு.. ரஜினியின் அடுத்த படத்தில் நடிக்கும் பிரபல காமெடி நடிகர்!

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் காமெடியனாக யோகிபாபு நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சென்னை: முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் யோகி பாபு நடிக்க உள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடி நடிகராக இருப்பவர் யோகி பாபு. அவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை இருக்கிறது. அவரை கதையின் நாயகனாக வைத்தும், சில படங்கள் தயாராகி வருகின்றன.

இதனால் யோகி பாபுவின் சம்பளம் கணிசமாக உயர்ந்துள்ளது. சமீபத்தில் தான் அவர் பங்களா கட்டி குடியேறினார். மிகவும் பிஸியாக நடித்து வருவதால், அவருக்கு கால்ஷீட் பிரச்சினை ஏற்படுகிறது.

கால்ஷீட் பிரச்சினை:

கால்ஷீட் பிரச்சினை:

கால்ஷீட் பிரச்சினை காரணமாகவே யோகி பாபுவால் 'பேட்ட' படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் சர்கார் படத்தில் யோகி பாபு நடித்ததால், ஏ.ஆர்.முருகதாஸ் தனது அடுத்த படத்திலும் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.

முருகதாஸ் படம்:

முருகதாஸ் படம்:

இதனால் ரஜினியை வைத்து அவர் இயக்கும் புதிய படத்தில் யோகி பாபு நிச்சயம் இருப்பார் என்றே கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றனர். கால்ஷீட் பிரச்சினை வரக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே அவரை ஒப்பந்தம் செய்யவும் முருகதாஸ் முடிவு செய்துள்ளார்.

யோகிபாபுவின் ஆசை:

யோகிபாபுவின் ஆசை:

இதனால் ரஜினியுடன் நடிக்கும் யோகி பாபுவின் ஆசை நிறைவேற உள்ளது. பேட்ட படத்தில் மிஸ்ஸான வாய்ப்பு முருகதாஸ் படத்தில் கிடைத்துள்ளதால், யோகி பாபு மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.

காமெடி ஜோடி:

காமெடி ஜோடி:

பொதுவாக தனது படங்களில் ரஜினியே காமெடியில் பின்னி பெடலெடுப்பார். அவருடன் காமெடி நடிகரும் சேர்ந்து விட்டால் படத்தில் நகைச்சுவைக்கு பஞ்சமே இருக்காது. ரஜினி-கவுண்டமணி, ரஜினி - செந்தில், ரஜினி- வடிவேலு என இந்தக் கூட்டணியில் பல வெற்றிப்படங்கள் வெளியாயின. ஆனால், சமீபகாலமாக ரஜினிக்கு அப்படிப்பட்ட காமெடி ஜோடி யாரும் கிடைக்கவில்லை. முருகதாஸ் படத்தில் அந்தக் குறையை யோகிபாபு நீக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X