Ajith: அஜித்துக்கு முதலில் இதைச் செய்யுங்க.. அங்க வந்து நான் எல்லாத்தையும் சொல்றேன்.. யோகிபாபு ஓபன்!

சென்னை: நடிகர் அஜித்குமாருக்கு இந்த ஆண்டு தொடங்கியதுதான் கொஞ்சம் சொதப்பலாக இருந்தாலும், அதன் பின்னர் இரண்டாவது வாரத்தில் இருந்து, இந்த ஆண்டு அவருக்கான ஆண்டாக மாறிவிட்டது. கார் ரேஸில் வெற்றி, பத்ம பூஷன் விருதுக்கு தேர்வு என அஜித், அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் என பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படியான நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த யோகிபாபு அஜித்துக்கு தனி பாராட்டு விழா நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே கூறியதைப்போலத்தான், விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என காத்துக் கொண்டு இருந்த ரசிகர்களுக்கு படம் பொங்கலுக்கு இல்லை என்ற கவலை அளிக்ககூடிய தகவல்தான் வந்து சேர்ந்தது. இது பெரும் அதிர்ச்சியை அனைவருக்கும் கொடுத்தது. இப்படியான நிலையில்தான், துபாய் கார் ரேஸ்ஸிற்கு சில தினங்களுக்கு முன்னர், தீவிர பயிற்சியில் இருந்த அஜித்குமார், பெரும் விபத்தில் சிக்கினார். நல்வாய்ப்பாக அவருக்கு எதுவும் ஆகவில்லை.

yogi babu ajithkumar ajithkumar racing vidaamuyarchi

இது எல்லாம் முதல் வாரத்தில் நடந்து முடிந்தது. இரண்டாவது வாரத்தில் இருந்து இப்போதுவரை அஜித்க்குமாருக்கு எல்லாம் ஏறுமுகமாகவே உள்ளது. அதாவது துபாய் கார் ரேஸில் அஜித்குமாரின், அஜித்குமார் ரேஸிங் அணி மூன்றாவது இடத்தினை வென்றது. துபாயில் நடைபெற்ற இந்த போட்டியைக் காண, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்தனர். அவருக்கு பலரும் வாழ்த்து கூறினர். ரசிகர்களைப் பார்த்த அஜித்குமார், தான் தனது ரசிகர்களை அளவு கடந்து நேசிக்கின்றேன் எனக் கூறினார்.

அஜித்: அதன் பின்னர் அஜித்குமார் தனது அடுத்த ரேஸிங் பணிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். இப்படி இருக்கும்போது விடாமுயற்சி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இப்படியான நிலையில்தான் அஜித்குமார், அவரது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்களை பெடும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, மத்திய அரசு.

yogi babu ajithkumar ajithkumar racing vidaamuyarchi

பத்ம பூஷன்: அஜித்குமாருக்கு நாட்டின் மூன்றாவது சிறந்த குடிமகனுக்கான விருதான பத்ம பூஷன் விருதினை அறிவித்தது. இது தொடர்பான அறிவிப்புகள் வெளியானதும், அஜித் ரசிகர்கள் தொடங்கி, அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அஜித் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

yogi babu ajithkumar ajithkumar racing vidaamuyarchi

யோகி பாபு: இப்படியான நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் யோகிபாபு, அஜித் சாருக்கு வாழ்த்து சொல்ல, அவர் குறித்து பேச தனி விழாவே நடத்தனும். அதற்கு நடிகர் சங்கம் ஏற்பாடு செய்யனும். அந்த விழாவில் நான் கட்டாயம் கலந்து கொள்வேன். அப்போது அஜித் சார் குறித்து நான் நிறைய பேசுகின்றேன் எனக் கூறினார். இவரது பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் நடிகர் சங்கம் அவருக்கு பாராட்டு விழா நடத்துவார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, பாராட்டு விழா நடத்தினால், அஜித் அதில் கலந்து கொள்வாரா என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

yogi babu ajithkumar ajithkumar racing vidaamuyarchi

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X