ஒரு ரியாக்ஷன்.. விஷாலை காலி பண்ணிட்டியே.. யோகிபாபுவிடம் ஃபன் செய்த தளபதி விஜய்
சென்னை: கோலிவுட்டின் காமெடி நடிகர்களில் யோகிபாபு இப்போது உச்சத்தில் இருக்கிறார். நகைச்சுவை நடிகராக மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் நடிக்கும் அவர் இதுவரை 300 படங்களில் நடித்திருக்கிறார். சமீபத்தில்தன் 300ஆவது படம் தொடர்பான அறிவிப்பு வந்தது. இந்நிலையில் விஷாலை பார்த்து அவர் கொடுத்த ரியாக்ஷன் பற்றி விஜய் ஃபோன் செய்து கலாய்த்த சம்பவத்தை அவரே மேடை ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.
சின்னத்திரையில் தோன்றி பிறகு வெள்ளித்திரைக்கும் வந்தவர் யோகிபாபு. சின்ன சின்ன வேடங்களில் நடித்துக்கொண்டிருந்த அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் கிடைத்ததை அடுத்து அதனை பயன்படுத்தி சரசரவென்று மேலே வந்தார். ரஜினி, அஜித், விஜய், சூர்யா என பல முன்னணி நடிகர்களின் படத்தில் காமெடி செய்த அவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. நிச்சயம் அவர் படத்தில் நடித்தால் அதன் காமெடி ஒர்க் அவுட் ஆகும் என்ற நிலைமையும் இருக்கிறது.
கதையின் நாயகன்: காமெடி நடிகராக நடித்துவந்த அவர்; கோலமாவு கோகிலா படத்தில் கதையின் நாயகனாக நடித்தார். அப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்த வெற்றிக்கு பிறகு அதே மாதிரி நடிப்பதில் கவனம் செலுத்திய அவர்; மடோன் அஷ்வின் இயக்கத்தில் மண்டேலா படத்திலும் நடித்தார். அப்படமும் மெகா ஹிட்டாகி தேசிய விருதினையும் வென்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து லீடு ரோல்களில் நடித்தாலும் கோலமாவு கோகிலா, மண்டேலா கொடுத்த அளவுக்கு மற்ற படங்கள் வெற்றியை கொடுக்கவில்லை.

நகைச்சுவையை விடாத யோகிபாபு: பொதுவாக ஒருவர் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்துவிட்டால் மீண்டும் காமெடி செய்ய வரமாட்டார்கள். சந்தானம், சூரி போன்றோ அந்த லிஸ்ட்டில்தான் இருக்கிறார்கள். ஆனால் யோகிபாபுவோ அப்படியில்லை. ஒரு பக்கம் கதையின் நாயகனாக நடித்தாலும் மறுபக்கம் தலைவன் தலைவி, ஜெயிலர் 2 உள்ளிட்ட பல படங்களில் காமெடி ரோலும் செய்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
யோகி கொடுத்த ரியாக்ஷன்: இதற்கிடையே ஆன் கேமராவில் மட்டுமின்றி ஆஃப் கேமராவிலும் யோகிபாபுவின் கவுண்ட்டர்களும், ரியாக்ஷன்களும் பெரிய அளவில் கவனம் ஈர்த்து சிரிப்பை வரவைப்பவை. அப்படித்தான் விஷாலுடன் ஒருபடத்தில் நடித்தபோது அவருடன் அருகில் அமர்ந்து சாப்பிட்டார் யோகி. அந்த சமயத்தில் விஷால் மும்மதமும் சம்மதம் என்கிற ரீதியில் கடவுளை மேலே பார்த்து வணங்க; அருகே உட்கார்ந்திருந்த யோகிபாபு கொடுத்த ரியாக்ஷன் பெரிய அளவில் மீம் மெட்டீரியல் ஆனது.
விஜய் ஃபோன்: அதை வைத்து பலரும் கலாய்த்தார்கள். இந்நிலையில் இதுகுறித்து விஜய் தனக்கு ஃபோன் செய்ததாக யோகிபாபு கூறியிருக்கிறார். ஒரு விழாவில் பேசிய அவர், "இந்த வீடியோவை பார்த்துவிட்டு விஜய் அண்ணன் எனக்கு ஃபோன் செய்தார். ஏன் டா அந்த மனுஷனே இப்போதான் மேலே வந்திருக்கிறார். நீ ஒரு ரியாக்ஷன் கொடுத்து காலி பண்ணிட்டியே என்றார். அதற்கு நானோ இல்லை அண்ணா சும்மாதான் செய்தேன் என சொன்னேன். அதற்கு அவர், 'டேய் டேய் உன்னை பத்தி எனக்கு தெரியும். எப்படி நீ ரியாக்ஷன் கொடுப்பனும் தெரியும் என சொன்னார்" என்றார்.


Click it and Unblock the Notifications











